பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை என்ருல், அது வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தான்.

ஆனல், இங்கே கதைக்கு ஒர் அதீதமான மகத்துவமும் கிடைத்துவிடுகிறது! அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொள் கிருள் பவளக்கொடி!-அவள் ஓர் அதிசயம்!- அந்த அதிசயம், பவளக்கொடியை நாளும் பொழுதும் வாழ்த்தவே செய்யும்! அதுமட்டுமல்ல; ஆண்டாளும் அவளே வாழ்த்தட்டும்!வாழ்த்துவாள்! - -

திமிழக அரசின் ஏடு தமிழரசு’; அதன் 1974-ம் ஆண்டுப் பொங்கல் சிறப்பிதழில் காணி நிலம் வேண்டும்" என்ற என் தொடர்கதை ஆரம்பமாயிற்று; நான் தமிழ் மண்ணைப் பிரிந்து கேரளமண்ணில் வாசம் செய்ய நேர்ந்த காலத்திலும் தமிழ்மண்ணின் கதையைச் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டாயத்தையும் இக்கதை என்னுள் உண்டாக்கிவிட் டது. மீண்டும் தமிழ்மண்ணுக்கே திரும்பியிருக்கிறேன்: இப் போதும் மேற்கண்ட கதை என்னுள் நிழலாடத் தொடங்கு கிறது. ஆம்; என்வரை காலம் மாறிவரவில்லை; மாற்றப் பட்டு வருகிறதென்றும் கூறுவேன்!-காலத்தை மாற்றும் ‘ரசவாதம் எனக்குத் தெரியாதா, என்ன? ஆகவேதான் என்னுடைய இந்தச் சித்துவிளையாட்டிலே, நாகரிக நெறியும் மனிதப்பண்பும் பொங்கு விரி காவிரியின் மண்வாசனையுடன் ஒரு நூதனமான போக்கில்,ஒரு வித்தியாசமான லயத்தோடு விளையாடுகின்றன; விளையாட்டுக் காட்டுகின்றன! இப்படிப் பட்டதோர் அழகான, நல்ல அனுபவம் எனக்குக் கிட்ட வாய்ப்பளித்த தமிழக அரசு’க்கும் தமிழரசு’ இதழுக்கும் இதயபூர்வமான என் நன்றியறிவைப் பணிவன்புடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

"வானதி உரிமையாளர் உயர்திரு திருநாவுக்கரசு அவர் கள் காணிநிலம் வேண்டும்’ என்ற என்னுடைய நவீனத்தை வழக்கம்போல் நவீனமான அமைப்புடன் சிறப்பாக வெளி பிட்டிருக்கிருர். அவர் என்பால் கொண்டிருக்கும் அன்பும் பாசமும் ஆலமரத்தைப் போன்றது. இந்நிழல் எனக்குத் தொடர்ந்து கிடைத்துவரும். நன்றி. -

'ஏலக்காய் வாரியம்? சென்னை-17

பூவை எஸ். ஆறுமுகம் 麓認=む=』 973