பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

§ {}

'அம் மான் மகளும் அயித்தை மகனும் இம்மாம் பொழுதுக்கா ரகசியம் பேசிக்கிட்டு இருக் கோணும்?"

கேள்வியில் சூட்டைக் காண்பிக்காமல், ஆளுல், கேள்விக்கு குடுகாட்டிக் கேட்டார் தேவர். அன்னக் கொடியையும் வீரமணியையும் தமக்கே உரித்தான புதிர்நோக்குடன் ஊடுருவித் துழாவினர் அவர்.

தந்தைக்குத் தந்தையாக மட்டுமல்லாமல், தாய்க்குத் தாயாகவும் விளங்கித் தன்னே வளர்த்து ஆளாக்கிய அன்புத் தந்தைக்கு இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடவா உரிமை இல்லை? எனவே, உரிமைப் பிரச்சினை எதையும் கிளப்பத் தயாராக இல்லை அவன்- வீரமணி.

ஆனல், அன்னம், தன் அத்தையைக் கொண்ட வரின் வினுவை அவ்வளவு லேசாக எடுத்துக் கொள்ள ஒப்பமாட்டாள். மகிழ்ச்சியின் ரேகைகள் மறையத் தொடங்கின. ஊர் உலகத்துக்கோ, இல்லாட்டி, உங்களுக்கோ தெரியாத எந்த ரகசி யத்தை நானும் என்னுேட அத்தானும் பேசிக்கிடப் போருேமுங்க? அப்படியே புது ரகசியத்தைப் பேசிக்கிட்டாலும், அதிலே தப்பு கிப்பு கிடையா துங்களே? அயித்தை மகனும் அம்மான் மகளும் தானுங்களே பேசிக் கிட்டோம், மாமா?' என்று தர்க்கரீதியான பேச்சால் மடக்கிளுள். நேர் கொண்ட பார்வையால் தன் அத்தையின் கணவரை அளந்தாள் கன்னிப்பூ, -