பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

É È

அன்னத்தின் துணிச்சல் வீரமணிக்குப் பிடிக்கவே செய்யும், பரிசுத்தமான நேர்மையின் பலத்தோடு ஊக்கமாகப்பேசுகிருள் அம்மான் மகள். நியாயம் தான்! ஆனால், அப்படியே உள்ளது உள்ள படி, அன்னத்தின் பேச்சை நியாயத்தின் அடிப் படையில் அப்பா எடுத்துக் கொள்வார் என்பது என்ன நிச்சயம்?

அப்பாவுக்கு முகம் சுண்டி விட்டது. தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டவராக அவர் காணப்பட்டார். கறுமை படிந்த கனத்த உதடுகளில் ஒரு நெளிவு தோன்றி மறைந்தது. 'அன்னம், மெய்யாகவே நீ ஒரு புதுமைப் பொண்ணு தான்!” என்று புகழ்ந்து பெருமூச்செறிந்தார்.

அந்தப் பாராட்டை அவள் அங்கீகரித் தாளோ; என்னவோ? அது கிடக்கட்டும்.உங்களுக்கு உடம்பு இப்போ சரிப்பட்டிடுச்சுங்களா? அபித்தை மகன் சொல்லக் கேட்டதும் எனக்கு மூச்சே நின்னுப்பிடும் போல இருந்திச்சுங்க,' என்று கவலை தெரிவித்தாள் அன்னம்.

'அன்னம், உன்னேட மூச்சு பத்திரம்! ...என் மூச்சு இன்னம் கொஞ்ச நாளைக்கு நிற்கவேநிற்காது. இந்தக் குடியிருப்பு மண்ணிலே நான் செஞ்சு முடிச் சாக வேண்டிய கடமைகள் எம்புட்டோ நிலுவை நிற்குது. தர்மராசா, ரெண்டொருத்தர் மாதிரி தட்டுக்கெட்ட புள்ளி இல்லை. அவன் நல்லவன். பேரிலேயே தர்மத்தையும் ராசாவையும் கோத்து வச்சிருக்கிற புண்ணியவான் அவன். என் மனசு