பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62

அவனுக்கு விளங்காமல் தப்பாது: ஆகச்சே, இப் போதைக்கு அவன் என் பக்கம் தலைவச்சுக்கூடப் படுக்க மாட்டான்!”-பெரியவரின் குரல் சிலும்பல்

திட்டியது.

வீரமணியின் மன உணர்வுகள் நெகிழ்ந்தன.

அன்னம் சிரம் தாழ்த்தி மெளனமாகச் சமைந் தாள்,

'தம்பி, இன்னமுமா சாப்பிடலே?' என்று சமையல்காரர் நினைவுபடுத்தினர்.

"அடேடே! சாப்பிடப்பா!' என்ருர் தேவர்.

முட்டைத் தோசையையும் மல்வித் துகையலை யும் பார்த்தான் வீரமணி. பிறகு அன்னக் கொடியை யும் தகப்பனுரையும் நோக்கினன். தோசை சாப் பிடும்படி அன்னக்கொடியை உபசரிக்க மாட்டாரா அப்பா? சில விளுடிகளைச் சோதனைக்கு உள்ளாக்கிய பின் 'சும்மா குந்து. தோசை கொண்டாரச் சொல் லுறேன்; சாப்பிடு அன்னம்,' என்று கோரினுன் முறை மச்சான்காரச்சிங்கம்.

அவள் தயங்கினுள்.

வாசற்பக்கம் மேற்கு நோக்கித் திரும்பிய லாரியை நோட்டம் பார்த்த காசி, தங்கச்சி, உன் அப்பன்காரர் கண்மண் தெரியாது வீட்டுக்குப் பறந்துக் கிட்டிருக்கார்,' என்று தாக்கீது கொடுத் தாா. -