பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

狩岛

இனி, நிற்க நிலைக்க நாழி ஏது?-அன்னம் பர பரப்புடன் நகர்ந்தாள். உரிமையின் உறவு நெகிழ, வீரமணியின் தட்டிலிருந்த எச்சில் முட்டைத் தோசையைக் கிள்ளி, அதை மல்லித் துகையலில் தொட்டுத் துவைத்தெடுத்து, வாயில் போட்டுக் கொண்டாள். நான் போயிட்டு வாரேனுங்க, மாமா!' என்று நாணம் பூத்து, மரியாதை தூவி விடை கோரினுள் அன்னக்கொடி.

'நல்லது. புறப்படு, அன்னகொடி!' என்று தேவர் அமரிக்கையாக விடை கொடுத்தார்.

‘போயிட்டு வர்றேனுங்க, அத்தான்!” என்று அத்தானிடம் பயணம் சொல்லிக் கொண்டாள் ராமையாத் தேவரின் செல்வி.

'போயிட்டு வா, அன்னம்!'

ஒற்றைக்கல் மூக்குத்தி ஒற்றைத் தனி விண் மீனக ஒளி காட்ட, விடைபெற்ருள் அன்னம்.

வீரமணியின் உள்ளம் விம்மிப் புடைத்தது: "அன்னம்! அம்மான் மகளே அன்னம்!”

நாட்டிற்குச் சரித்திரம் படைக்கச் சரித்திர மாகி விட்ட செம்மல்களும், நாட்டின் சரித்திரம் காக்கச் சரித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும். நல்லவர்களும் அதோ, சிரித்துக் கொண்டிருக்கிருர் கள்!... ..

கை ஈரத்தைத் துவாலேயில் துடைத்துக்கொண் டான்; சன்னல் ஒரமாகக் குறிச்சியை வசம்கணித்து