பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

翁垒

இழுத்துப் போட்டான்; பதமாக உட்கார்ந்தான்; விசுப்பலகையில் இருந்த தோல்பையை எடுத்தான். லேசாக இருந்தது. தீர்ப்புத் தாள்களின் சுமை மிக மிகக் குறைச்சல்தான். ஆனால், அவை இக்குடும் பத்தை அழுத்திச் சோதிக்கக் காத்திருக்கும் சுமை யின் பயங்கரம் அற்ப சொற்பமல்ல. சுமை தாளா மல் மண்டை வலித்தது. பொட்டு நரம்புகள் விட்டுப் போகிறமாதிரித் தெறித்தன. அம்மான் சம்பந்தப்பட்ட சட்டத்தின் தீர்ப்புப் பற்றித் தன் தந்தை அலட்டிக் கொள்ளாமல் சிவனே' என்று இருக்கும் போக்கு அவனுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. வீங்கின புண் வெடிக்காமல் தப்ப முடி யாது. அப்பாவிடம் தீர்ப்பு சம்பந்தமகாக சுணங் காமல் பேசியாக வேண்டும். இந்தக் கண்டத்தை விட்டு, எப்படித் தப்பிப் பிழைக்கப் போகின்ருேம் என்பதற்கும் விளக்கம் வேண்டும். வழி புரிந்து விட் .டால், அப்பால் வழியைக் கடப்பது ஒன்றும் கம்ப சித்திரமல்ல. அவன் முதுகை வாய்ப்பாகச் சாய்த்துச் சாய்ந்து கொண்டான். -

அது அவனது தனி அறை.

தெற்குப் பார்த்த வீடு. இதமான காற்றுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது.

மின் விசிறி நின்றது.

துரக்கம் சொக்கியது. ஏப்பம் பறிந்தது. தான்

எச்சில் படுத்தியிருந்த முட்டைத் தோசையில் அன்னம் ஒரு பகுதியைக் கிள்ளிச் சாப்பிட்டு விட்டுச்