பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

65

செல்ல, அவள் தீண்டிய மிச்சத்தைச் சொ, வைக்காமல் அவன் ஒரு விசித்திரமான சிருங்கா, ரசிகத் தன்மையோடு சாப்பிட்டுத் தீர்த்தானே, அப்பொழுது அது அமிர்தமாகச் சுவைத்திட்ட அருமை பெருமை அவன் அந்தரங்கத்துக்குத்தான் அத்துபடியோ-மறுக்க முடியாது மறுக்கவும் கூடாது. மனம் கொண்டதே மாளிகை!-அம்மான் மகள் நெஞ்சில் விளையாட, அவளோடு அவன் நினைவில் விளையாட, ஊரை மறந்து. உலகத்தை மறந்து, மெய்ம் மறந்த சித்திர விசித்திரமும் அவனுடைய அந்தரங்கத்துக்குதான் வெளிச்சமோ? ஆளுல் அவனுடைய அம்மான் ராமையாத் தேவர் நினைவில் குதித்து, நெஞ்சில் பாய்ந்தபோது, அவன் தன்னையும் அறியாமல், தன்னேயும் மீறிய விதத்தில் பற்களை நற நற வென்று கடித்துக்கொண்டான்:

குலச்சுடரைப் பெயர் சொல்லிப் பாசம் சொல்லி அழைக்கின்ருர் முதியவர்.

மடியிலிருந்த மண் ரசாயனம் நழுவுகிறது, பேணு மடியிலிருந்து நழுவவில்லை.

அப்பா!' என்று விளித்தவாறு, வீரமணி தன் தந்தையின் காலடியில் வந்தமர்ந்தான். தேங்காய்ப். பூத் துண்டைத் தோளில் வாகாகப் போட்டிருந்: தான்; முண்டா பனியனே இழுத்து விட்டான்; சுருள்முடிகளை ஒதுக்கிக் கொண்டான்.

பெரியவர் ஆதிமூலம் மெள்ள எழுந்தார்; ஊஇ. குத்தின இடத்தைத் தடவிக் கொடுத்தவராக திண்டை நகர்த்திச் சுவரோடு சுவராகச் சாய்ந்தார்.