பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

6 7

அமைதியைக் கலைத்துக் கேட்டார். கேள்வி அமைதி யாகவே ஒலித்தது. ஆனால், கேள்வியில் அமைதி இருக்க கடவு இல்லை.

"ஆமாங்க,’’ என்று சடனை யை உணர்ந்தும் உணர்த்தியும் சொன்னன் அவன்.

"தீர்ப்பைப் படிச்சிட்டியா?”

“தீர்ப்பை நான் படிக்கிறதாவது? தஞ்சா ஆரிலே இதுக்கு எட்டாம் நாள் நீதிபதி தீர்ப்பைப் படிச்சிட்டாருங்களே, அப்பா?’ என்ருன் வீரமணி; குறும்புத்தனம் வாய்க்குள்ளாகவே சுழித்தது.

தேவருக்குத் தம் மைந்தனின் பொடி தெளித்த பேச்சு விளங்காமல் இல்லை. 'இப்பைக்குக் கைக்கு மெய்யாய் வச்சுக்கிட்டிருக்கியே தீர்ப்பு நகல். அதைப் படிச்சிட்டியான்னுதான் நான் உன்னைக் கேட்டேன்,' என்ருர். மடங்கவும் மடக்கவும் தமிழுக்கும் தெரியும்; அவருக்கும் தெரியும்.

'தீர்ப்பைத்தான் தஞ்சாவூரிலேயே படிச்சுப் பார்த்திட்டேனுங்களே!' மண்வளம் படித்தவன் வீரமணி, மனவளமும் பழகியவன். வீசிக் கொண் டிருக்கும் புயலுக்கு நடுவிலே, அகல் வைராக்கியத் தோடும் ரோசத்தோடும் எரிந்து கொண்டிருக் கிறது!-வியப்பு ஆட்கொண்டது.

“என்ன சொல்லுது தீர்ப்பு?' கைகளில் தாங்கிய கன்னத்தைச் சாய்த்தார் அவர்.