பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

69

எல்லாம் ஒட்டுது!-உப்புப் போட்டுச் சாப்பிடுருளு அவன்? ராமையா அண்ணைக்குக் கடுத்தத்திலே சொன்ன சொல்லை நம்பினேன் நான்; நினைச்சுப் பார்த்தால் பயாஸ்கோப் பார்க்கிறதாட்டமே இருக்கு து! நான் அவன் கிட்டே உதிரி உதிரியாய் வாங்கியிருந்த கடன் தொகை சாடாவையும் எங்க ரெண்டு பேர் பேரேட்டுப் பிரகாரம் ஒத்துப் பார்த்துக் கூட்டுப் புள்ளி போட்டோம். கடன் பதினெட்டாயிரத்துக்கு ஓடிடுச்சு. புரோநோட்டுப் பூரிச்சுக்கிட்டால் தேவலாம்னு பல்லேக் காட்டினன் அவன். தாயும் மகளும் என்ருலும் வாயும் வயிறும் வேறேதானே? நான் அட்டி சொல்லல்லே! அப்பத் தான் ஒரு புதுச் சூதைப் பொருத்திப்பிட்டான் அந்த அயோக்கியத் துரோகி!'

பெரியவர் சற்றே ஒய்ந்தார். பிறகு தொடர்ந் தார்: -

"வீரமணி, கேட்டுக்க கதையை: அயித்தான், விடிஞ்சதும் நாள் சுகமில்லை. ராவோடு ராவா புரோநோட்டு எழுதித் தந்திடுங்க. நீங்க எனக்குத் தர வேண்டிய பதினெட்டாயிரத்துக்கு இப்ப நோட்டு எழுதப்போlங்க. உங்களுக்கு என்னமோ அவசரமான முடை உறுத்துதின்னு சொன்னிங் களே? நாளை அந்திக்குள்ளே ரூபாய் ரெண்டாயி ரத்தை ரொக்கமாய் உங்க கையிலே கொண்டாந்து தந்துப்புட்றேன் கட்டாயம். ஆனபடியினலே, தொகை ரவுண்டா வருறப்பிலே நீங்க இருபதா யிரத்துக்கே எழுதித் தந்திட்டால் சிலாக்கியம். ஒரு

கா. நி-5