பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70

சல்லிக் கூட பிசகு பண்ண மாட்டேன். நம்புங்க!

அப்படின்னு சொப்பினன். சொந்த மச்சான் பேச்சை, அதிலேயும் பணத்திலே படுத்துப் புரளுற மச்சாவி பேச்சை நம்பாமல் என்ன செய்ய? ஒப்புக் கிட்டு அவன் சொல்லை நம்பி, இருபதாயிரத்துக்கே அவன் இஷ்டப்பிரகாரம் நோட்டு எழுதிக் கொடுத் திட்டேன். ஆன, விடிஞ்சதும் கதை திசை மாறிப் பூடுச்சு!-முதல் காளாஞ்சி தவசல் மூண்டிச்சு. ஆத்தாளுக்குப் பயப்படுகிற ஆத்மா இது. நியாயத்துக்குத் துண்ை நின்னேன். அவஞே, தன்னுேட அநியாயத்துக்கும் நான் துணை நிற்கல் லேன்னு கடுப்பு கொண்டு, சொன்ன சொல்லையும் காற்றிலே தூற்றி விட்டுப் புட்டான். கடைசி மட்டுக்கும் அவன் அந்தப் பணம் ரெண்டா ஆயிரத்தை என் கையிலே கொடுக்கவே கிடையாது!’

இருமல் சிணுங்கிற்று.

பேச்சு முடியவில்லை.

'தம்பி, தெய்வம் கண்ணுக்குத் தெரியாது. ஆனலும் நாம பயப்படுருேம். ஆனல் உன் மாமன் ராமையாத் தேவனே கண்ணுக்குத் தெரிகிற பணத்துக்குத் தான் பயப்பட்டுப் பழக்கம். ஊர்க்கட்சித் தகராறிலே அந்தப் பயலோட மானத் தைக் காத்தவன் நான். அந்த நன்றியை மறந்திட் டான். போகுடிச் சென்மம்! ... தெய்வம் வெறும் கல்தானேன்னு நம்பி, என்கிட்டே கொடுக்காத ரூபாய் ரொண்டாயிரத்தையும் சேர்த்து எழுதப் பட்டிருந்த என் புரோநோட்டின் பேரிலே எம்மேலே