பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72

உங்ககிட்டேயிருந்து இருபதாயிரம் ரூபாய்க்கு பிராமிசரி நோட்டு எழுதி வாங்கிட்டார் அவர். கேடு கெட்டவர்! திட்டமிட்டே நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டார்!-உண்மை கசக்கத்தான் செய்யுது. அம்மான் ராமையாத் தேவர் வேணும்னே மோசடி செஞ்சிட்டார். அந்த மைகாதக மனுசன் இரண்டாயிரத்தை உங்க கையிலே ஏற்கெனவே கொடுத்திட்டுத்தான் உங்க கிட்டேயிருந்து நோட்டெழுதி வாங்கினேன்னு கோர்ட்டிலே அடிச்சுப் பேசுறதுக்குச் சாட்சி சொல்ல உங்க பிராமிசரி நோட்டு அவர் கையிலே இருந்திச்சு! ஆன, நீங்க அந்தத் தொடு சுப் பணம் ரெண்டாயிரத்தை அவர் கிட்டேயிருந்து வாங் கல்வே என்கிறதுக்குச் சட்ட பூர்வமான சாட்சி எதுவுமே உங்க வசம் இல்லாமல் போயிடுச்சுங்களே? இல்லீங்களா... அப்பா!'

"அது உண்மைதான், தம்பி!'

'அந்த உண்மைக்குப் பேர் தான் தருமம். அந்தத் தருமம் தான் கடவுள். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என் கிறது. மூத்தவங்க வாக்கு. அதைச் சோதிச்சுக் காட்டவேண்டியது, காலத்தோட பொறுப்பு. ஆன நம்பளைச் சோதிக்க நேரம் காலம் பார்த்துக்கிட்டுப் பிணந்தின்னும் கழுகாய்க் காத்துக்கிட்டு இருக்கார் ராமையா அம்மான்! அதைச் சமாளிக்கக் கைக்கு மெய்யாய் இப்பவே ஒரு வழியைத் திட்டமிட் முடிவு செஞ்சாக.வேணுங்க, அப்பா!'