பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74

பெரியவர் வாய் திறந்தார்.

அப்பா விடுகதை எதுவும் போடாமல் இருக்க வேண்டும்!

5. எழிற்கனவு காதலா? காலமா?

காவடிப் பாரம், சுமப்பவனுக்குத்தான் தெரியும் !

இது உண்மை.

ஆதிமூலத்தேவரின் தலையில் சுமந்திருக்கும் அல்லது, சுமத்தப்பட்டிருக்கும் சுமையை அவரே அறிய முடியும்.

அதே மாதிரி, வீரமணியின் மனத்தில் சுமந் திருக்கும் அல்லது சுமத் தப்பட்டிருக்கும் சுமை அவனுக்குத்தான் அர்ப்பணம்.

"அப்பா விடுகதை போடாமல் இருக்க வேண் டும்!--இவ்வாறு அவன் கவலைப்பட்டான். கவலை யில் அச்சமும் மேலோங்கி யிருந்தது. இப்பொழுது தன் தந்தை பேசப்போகும் விஷயம், அவர் சுட்டின மாதிரி, தன்ளுேடு சம்பந்தப்பட்ட மங்களகரமான காரியம் பற்றியதுதான் என்பதை அறிந்ததும், அவனுக்குத் தன் திருமணம் பற்றிய சிந்தனைதான் எடுத்த எடுப்பிலே தொடுத்து நின்றது. கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்னும் விவரத்தை அவன் அறிவான். ஆகவே, அந்த நீண்ட பந்த பாசத்துக்குத் தன் கனவுப்படி ஆளாவதோ