பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

80

கொண்டுஎன்கைப் பணத்தையும்தண்ணியாய் வாரி இறைச்சேன். கட்சி சேர்க்க வேணுமா? ஆளுங் களைக் கூட்டித் திரட்டிக் கச்சை கட்ட வேணுமா? இதுசமயம், ராமையாகிட்டே கடன் உடன் வாங் கத் தலையெடுத்தாச்சு. உன் படிப்பை உத்தேசிச்சு முதலிலே நீ கோயம்புத்துருக்கு அலேஞ்சு, கடை சீலே சிதம்பரத்திலே திகைஞ்சுது உன் பட்டப் படிப்பு; அந்தப் படிப்பை உத்தேசிச்சும் ராமையா கிட்டே ஒரு நம்பிக்கையோட நாலேஞ்சு வருசம் கடன் பட நேர்ந்திடுச்சு. என் கிட்டே கொடுக்காத ரூபாய் ரெண்டாயிரத்துக்கும் சேர்த்து, நையம் பாடி என்னே நோட்டெழுதித் தரச் சொல்விட்டு, மறு நாள் முதல் காளாஞ்சி விசயமாய் நியாயத்தை முன்னிட்டு அவனுக்குப் பாதகமாய் நான் நின்ன கோபத்திலே, என் பேரிலே அநியாயமாகக் கோபப் பட்டான். முடிஞ்ச முடிவிலே, என்னைப் பிராது பண்ணித் தனக்குச் சாதகமாய்த் தீர்ப்பையும் 'நிறைவேற்றி வாங்கி வச்சுக்கிட்டான் அவன்!... 'வீரமணி! அந்த நாளையிலே உன்தாய் மாமன் ராமையாவோட மானம், மரியாதையை நிலைநிறுத் திக் காப்பாத்த வேண்டி, அவனுக்காக நான் என் தலையைக் கொடுத்தேன். அந்த நன்றியைக் கூட மறந்திட்டான் அந்தப் படுபாவி! ரோசம் கெட்ட வன், இப்போ தன்னுேட பரம வைரிகளோடே ராசி யாகிக் கூடிக்கிட்டான்! மானங் கெட்ட ராமையாப் அபயல் என் மானத்தை வாங்கப் போருளும்! மனப் பால் குடிக்கிருன்!...சாலைச் சந்தியிலே சவடால் பேசலையா அவன்? அந்த நயவஞ்சகப் பாவி எப்படிப்