பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

82

யொலி வடக்கில் தொடங்கி, மேற்கே மறுகி மிதந்து வந்து கொண்டிருக்கிறது.

காசி, பெருங்ாாய டப்பாவும் கையுமாக வந்தார். ஆடுகல் இடுக்கில் ஒளிந்திருந்த தம்பிக் கோட்டை வீச்சரிவாளைத் தேடிப்பிடித்து, கைப்பிடி யைத் தாங்கிப் பெருங்காயத்தைத் துண்டு பண்ணி ஞர். பெருங்காய வாசனையை நுகர்ந்தவராக எழுந் தார். 'சோறு வடிச்சாயிடுச்சுங்க, ஐயா!' என்று சேதி தெரிவித்தார்.

'சோறு வடிச்சிட்டா, சாப்பிடறதுதானே, காசி?’ என்ருர் பெரியவர்.

வீரமணி சிரிக்க முயன்ருன்.

'தலை இருக்க வாலை ஆடச் சொல்லுறிகளா பெரியவுகளே! என் சாப்பாட்டுக்கா இப்போ அவதி? நீங்களும் சின்னவரும் காலா காலத்திலே சாப்பாட்டை முடிச்சிக்கிட்டா, அது போதுமுங்க. ரெண்டு மாமாங்கத்துக்குக் கிட்டே உங்க நிழலி லேயே அண்டிக் கிடக்கிற கால்படிஅரிசிஆத்மா இது. என் சோற்றைக் குறளியா கொண்டு போயிடும்? சரி, எந்திருங்க. மத்தியான்னச் சாப்பாடு முடிஞ்சு பள்ளிக்கூடம் கூடத் தொடங்கியிருச்சுங்க, என்ருர் சமையல் காசி. 'நான் போய், தக்காளி ரசத்துக்கு ரவை பெருங்காயம் போடணும்,' என்றும் கூறி ஞர்.

புகையிலைச் சக்கையைக் காறி உமிழ்ந்தார் முதிய மனிதர். பெருங்காயத்தின் நெடி அவருக்கு