பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83

இதமளித்திருக்கலாம். பெருங்காயம் வைத்திருந்த பாண்டம் அவர் சிந்தனையில் ஆலவட்டம் சுற்றி யதோ, என்னவோ?-'தம்பி, மூச்சுள்ள மட்டும் பேச்சு மாளாது. ஏந்திரு. சோறு உண்ணுவோம். நாம் ஒரு வேளே கூடப் பட்டினி கிடக்க உன் ஆத்தா மகராசி சம்மதிக்க மாட்டா காசியும் அப்படித் தான்!” என்ருர். பின்னர், முகத்தில் ஒரு தெளி வைக் காட்டி மைந்தனை நோக்கி விழித்தார். 'தம்பி, உனக்குப் பிடிக்குமேன்னு வத்தல் குழம்பு ஆக்கச் சொன்னேன். பூண்டுப் பல் உண்டனவே போட்டிருப்பான் காசி. நித்திலி கச்சப் பொடியை மசாலா தூவி வறுத்திருப்பான். என் பாடு வேட் டைதான். உன் பேரைச் சொல்லி நானும் மூக்குப் பிடிக்கச் சாப்பிடப் போறேன்!” என்ருர்,

வீரமணி பதனமாக முறுவல் அணிந்தான். இடுக்கண் இடை விளைந்த பூஞ்சிரிப்பு. துன்பத் திற்கு மத்தியில் அவனுல் சிரித்திட முடிகிறது!வள்ளுவர் வல்லவர்!

'தம்பி, நீ போய்ச் சிதம்பரம் கடுதாசியை நிதானமாய்ப் படிச்சிட்டு வா. அதுக்குள்ளே நான் மூஞ்சி கழுவி, சாமி கும்பிட்டுட்டு வந்திட்றேன். நாம ரெண்டு பேரும் சுடுசோறு சாப்பிடலாம். அந்திக் கட்டுக்குள்ளளாற நான் சிலட்டுர் அரிதி போய், போனதும் வந்ததுமாய்த் திரும்பியாக ணும்,' என்று குறிப்புத் தந்தார், தேவர்.

ஆடும் சிதம்பரத்தினின்றும் ஆடாமல் அசை யாமல் வந்து, இப்பொழுது ஆடியசைந்த மணிய