பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

&香

லேயே இவ்வேண்டுதலே மறுபடி விடுத்துள்ளேன். மற்றப்படி, இதற்கு பண்ட மாற்று அந்தஸ்து ஏதும் கொடுக்கவில்லை நான். தாங்களும் கொடுக்க லாகாது. அன்புப் பதிலே என்ைேடு அப்பாவும் ஆவலோடு எதிர்பார்ப்பாராம்!

-தமிழரசி.

உயிர் நிலையாக இயங்கின. அன்போடு கடிதத் தைப் படித்து முடித்தான்; அழகிற்கு அரசியான தமிழரசி அன்பிற்கு அரசி என்பதை அவன் தத்ரூப மாக அறிந்திருக்கின்முன். அவள் தமிழுக்கும் அரசி தான் என்ற உண்மையை இப்பொழுது வீரமணி அறிந்தான். அவள் கடிதத்தை அவனுடைய இலக்கிய ரசிப்பு மனம் வெகுவாக நேசித்தது. கடிதத்தில் அவள் அள்ளிச் சொரிந்திருந்து அள்ளக் குறையாத அன்பைப் பெரிதும் பாராட்டினன். ஆனல், அக்கடிதத்தில் குமாரி தமிழரசி பேசாமல் பேசியிருக்கும் அந்தப் பேச்சுக்குப் பொருள் என்ன? அந்தப் பொருளுக்கு விடை என்ன? விடையை யார் சொல்ல வேண்டும்? நான் அல்லவா?-நான் என்ன விடை சொல்லுவேன்? என்ன மறுமொழி கூற வேண்டும் நான்? ஒ...! தமிழரசி என்னேக் காதலிக் கிருள், !'...விழிகளின் ஈரம் இதழ்களைச் சுட்டிருக்க லாமோ? -

'தம்பி, வா...வா!'

- ஆதிமூலம் ருசித்துச் சுவைத்து உணவு கொண்டார். நடந்த நடப்புக்கள் சகலத்தையும்