பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

7

மறந்து விட்டவர் போல ஒரு கணம் தோன்றினுர். நடந்த கதை எதையுமே அவர் மறக்கவில்லை என்று கட்டும் வகையில் மறுகணம் அவர் காணப்பம் டார். ஆனல் அவரது நாட்டமெல்லாம் இப்போது சாப்பாட்டில்தான்.

r 'இன்னம் ஒருவாட்டி மட்டும் பூண்டுக் குழம்பு ஊத்தட்டுங்களா?”

'ஆத்தாடியோ! தாங்காது!...தாங்காது!’ 'தம்பிக்கு?...'

‘'வேணும்...வேணும்!”

“நான் கிழம் கட்டை உறைப்பு தாளாது. நீ வயசுப் பிள்ளே. அதிலேயும் உனக்குத்தான் உறைப்பு ஏகமாய்ப் பிடிக்குமே?”

'சரிங்க, கொஞ்சமாய் ஊத்துங்க, காசி

தக்காளி ரசத்தில் உப்பு முனைப்பாம்; பெருங்காயம் துக்கலாம்!”

காசிக்கு முகத்தில் ஈ ஆடவில்லே.

கட்டித் தயிரும் வடுமாங்காய் ஊறுகாயும் என்ருல் இருவருக்குமே நிரம்பவும் பிடித்தம், ஒரு

பிடி சாதம் கூடுதலாகவே செல்லும்.

"ஆவன்ன-தீன' வெண்கலக் கடைக்குள் புகுந்த யானைக்கு முன்னே வரும் மணியோசையாகக் குரலே முன்னே