பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

உடலும் சிவிர்த்தது. கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில், அவன் விண்ணுக்குப் பறந்தான்; மண்ணுக்கு மீண்டான். அவன் மெய் உணர்ந்து, விழிப்புப் பெற்ற சமயம் அவன் மெய்யை உணர்ந்தான். அள்ளக் குறையாத பாசம் அள்ளக் குறையாமல் பொங்கியது; பீரிட்டது. நன்றியறிவுக் கண்ணீரின் முத்தங்கள் அவனது அழகான கன்னங்களை முத்தமிட்டன; தேங்காய்ப் பூத் துண்டை எடுத்தான் அவன். அண்ணா!-யார் அழைத்தார்கள்? மாறாத சோகத்தோடும், மறையாத ஏக்கத்தோடும் திரும்பலானான் வீரமணி.

'வீரமணி அண்ணா!’

வீரமணி புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டான். "ஓ! ...... மாணிக்கமா?’’ - -

"ஆமாங்க, அண்ணாச்சி,' என்று வாஞ்சை யுடன் கூறினான் மாணிக்கம். 'தஞ்சாவூரிலிருந்து திரும்பிட்டீங்களா? முதலிலே உங்களோட தேர்வு முடிவைச் செப்புங்க. அப்பத்தான் மனசு சமா தானப்படுமுங்க. முடிவு நாம எதிர்பார்த்தாப்பிலே பழம் தானுங்களே?' என்று ஆர்வம் மேலிடக் கேட்டான்.

'பழம்தான் தம்பி, பழம் தான்!... உன் நல்லெண்ணமும், நல்வாக்கும் பலிச்சிடுச்சு! நான் முதல் வகுப்பிலே தேறியிருக்கேன், மாணிக்கம்!” என்றான் வீரமணி, கனி இதழ்கள் கனிவாய்த் துடித்தன.