பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

§ {

'நூற்றிலே ஒரு தாக்கல் தானுங்க, நல்லதம்பி என் வீட்டிலே காலடி எடுத்து வைக்கிற துக்குத் தகுதி படைச்ச ஒரு மருமகள் சம்பந்தமாய்த் தான் நானும் யோசிச்சுக்கிட்டிருக்கேன். ஆவணியிலே அந்த நல்ல காசியம் முடிஞ்சுதின்ன, நீங்க சொன்னுப்பிலே முன்னே எங்க வன்னியம்மை ஆளுறப்பு இந்த வீடு பூத்துக் குலங்கினது கணக் கிலே, மறுபடியும் சீதேவி சிரிச்சுத் தன்னுனேதன்னுன்னே என்று கும்மி கொட்ட ஆரம்பிச்சிடு வாள்னுதான் எனக்கும் நல்ல நம்பிக்கை கைகூடி இருக்குது'

“உங்க நல்ல மனசுக்கு நல்லது கிட்டாயம் நடந்தே திரும். மகமாயி நல்ல விளக்கைச் சத்திய மாய் ஏற்றி வச்சிடுவாங்க, ஐயா!'

தேவரின் இமைகள் நனைந்தன. சூன்யத்தை நோக்கி அவருடைய நலிந்து மெலிந்த கைகள் குவிந் தன. பிரார்த்தனைக்குக் காணிக்கை வேண்டும்; முத்துக்கள் சிதறின. தன் நிலை எய்தினர். விரலிடுக் கில் ஒடுங்கியிருந்த நோட்டுக் கற்றையை நீட்டிஞர். 'செட்டியார் ஐயா, உங்க கையிலே கைமாற்றி வாங்கின கடன் ரூபாய் ஐநூறும் இருக்கு எண்ணிப் பார்த்துக்கிடுங்க. எல்லாம் அசல் நோட்டுங்க. சரி பார்த்துக்கிடனும்,' என்ருர். பிறகு, வலது கை உள்ளங்கையில் ஒளிந்திருந்து பத்து ரூபாய்த் தாளே நீட்டி, 'ஆனி முதல் தேதிக் கடுத்தத்திலே கடன் தந்தீங்க. இன்னேக்கு ஆடி முதல்நாள். ஆக, ஒரு மாசத்துக்கு உண்டான நடைமுறை வட்டியை,