பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

9 5

வேளை, எண்ணியது நடக்கவில்லையானல்?--இத்தனை ஆண்டுக் காலமாக அல்லும் பகலும் அனவிரதமும் அவன் தன்னுடைய இதயத்தின் அச்சாணி மண்ட பத்திலே அன்னக்கொடியாகிய பொற்பின் செல்வி யைக் கொலுவைத்து,அழகுபார்த்து, அன்புவைத்து, பாசம் கொண்டு அவளோடு தானும் தன்னேடு அவளுமாகப் பிணைந்தும் இணைந்தும் கனவுத் தேரேறி வெள்ளோட்டம் புறப்பட்டு ஆனந்தத் திருக் கூத்து ஆடி ஆடிப் பழக்கப்பட்டு விட்ட அவனுடைய அதே இதயத்தினின்றும் பொற்பின் செல்வி அன்னக்கொடியைக் கைந் நொடிப்பொழுது கூடப் பிரித்துப்பார்க்க அவனுடைய இதயம் ஒரு போதும் சம்மதிக்காது; சம்மதிக்கவே சம்மதிக் காது என்ற அந்தரங்கத்தை அந்தரங்க சுத்தியோடு உணராத நிமிடம் உண்டா? அறியாத விளுடி உண்டா? அப்பா விடுகதை போட மாட்டார்! நல்லவாக்குக் கொடுக்காமல் இருக்கவே மாட்டார்:

பழங் காலத்தின் ஜப்பான் கடிகாரத்துக்குப் பேசத் தெரியும்! மணி மூன்று!...

வீரமணி பெருமூச்செறிந்தான். அது சுட்டது. மணவினைப் பிரச்சினையும், கடன் சுமைச் சிக்கலும் இரு வேறு முளைகளாகி, களம் ஆகிவிட்டிருந்த அவனது நெஞ்சத்திலே அறப் போராட்டம் நடத்து வதைத் தடுத்துத் தடை போட அவனுக்கு வழி தான் பிடிபடக் காணுேம்! பூச்சாண்டி காட்டி அழுத்திக் கொண்டிருக்கும் கடன்சுமையைக் கழிக்க வழி என்ன வைத்திருக்கிருர் அப்பா?-ஆ...த்... தா...!"