பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

§ 7

ஆனல், தேவரோ வாய் விட்டுச் சிரித்து விட்டார். 'ஊம், சொல்லு. சொல்ல வேண்டிய தைச் சொல்லிடு,' என்ருர்.

வீரமணி மெளனம் சாதித்தான்.

"வீரமணி, நீ கூடத்தான் இப்போ என்னைக் கேள்வி கேட்டுச் சோதிக்கிறே. மெளனம் சாதிச்சு விடுகதை போடுறே. சிரிக்க எத்தனம் பண்ணி,ஆளு சிரிக்க மாட்டாமல் புதிர் வைக்கிறே. அது போகட்டும். நடப்புத் தாக்கலுக்கு வா!'

'தமிழரசி எ ன க் குத் தா ன் லெட்டர் போட்டுச்சு. ’’

“நல்லாய்த் தெரியும். தெரிஞ்சு தான், என் அருமை மகனுக்கு வந்த தபாலை நான் உடைச்சிப் படிச்சேன்!”

'அதுக்கு உங்களுக்கு இல்லாத உரிமையா? அதைப் பற்றி நான் மூச்சுக் காட்டினேனுங்களா, அப்பா?” :

"நான் அப்படி உன் மேலே குற்றப் பத்திரிகை வாசிச்சேனங்காட்டி?’

அப்பாவிடம் வாய் கொடுத்துத் தப்பிக்க இயலாது! சிரித்துவிட்டான் வீரமணி. தமிழரசிக் குக் கடுதாசி போடுறதுக்கு எனக்கு அவகாசம் வேனும்,' என்ருன்..சொற்களில்ஒரு வீம்புத்தனம். வீம்பிலே அகம்பாவமும் நீரோடியிருக்குமோ?