பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

534

வர்களின் கண்டம் சிவப்பதில்லை; வாய் சிவக்றெது. அவ்வாறு நஞ்சத்தை உண்ட திருவாய் நீல நிறம் பெற்றிருக்க வேண்டுமே! உண்ட வாய் நிறம் மாறாமலே சிவந்திருக்க, கண்டம் மாத்திரம் இருள் நிறம் கொண்டு விளங்குகிறதே! கண்டத்தினுள் அடங்கிய நஞ்சு மிக்க கறுப்புடையதாகையால் அங்கே தன் ஒளியைப் புறத்திலும் வெளிப்படும்படி செய்கிறது. அப்படி இருண்ட நஞ்சு வாயையும் அல்லவா கறுத்திருக்கச் செய்ய வேண்டும்? இங்கே அப்படி இல்லையே!

“இதற்கு என்ன காரணம்? இதை நீயே சொல்லியருள வேண்டும்” என்று இறைவனைக் கேட்கிறார் அம்மையார்.

ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதுஇருப்ப
உன்னுடைய கண்டம் இருள்
கொண்டவாறு என்? இதனைக் கூறு.

'அதனை உண்ட வாயானது தன் இயல்பான திறன் கெடாமல் இருக்க, கண்டம் மாத்திரம் கறுப்பானது ஏன்?" என்று கேட்கிறார்.

ஒளிவிலி வன்மகனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தனையில் சேர்வாய் —ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதுஇருப்ப உன்னுடைய கண்டம்இருள்
கொண்டவாறு என்? இதனைக் கூறு.

[எம்பெருமானே, ஒளியையுடைய கரும்பு வில்லை உடைய வன்மையான காமனைச் சாம்பராகும்படி திருவிழியால் பார்த்து, ஞானத்தினால் தெளிவுபெற்ற அன்பர்களின் சித்தத்தில் தங்கி வடிவத்தைக் காட்டும் ஐயனே, ஒளியையுடைய ஆலகால விடத்தை உண்ட வாய் தன் நிறம் மாறாமல் இருக்க, உன்னுடைய திருக்கழுத்து மட்டும், கரிய நிறத்தை அடைத்த வண்ணம் ஏன்? இதை எனக்குத் தெளிவாகச் சொல்வாயாக.