பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

538

ஒளி விலி – ஒளிக்க வில்லையுடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். விலி – வில்லி, இடைக்குறை. தன் போர்க்கருவியாக மென்மலரைக் கொண்டாலும் அவன் வலியவன்; எல்லாரையும் காம உணர்ச்சியில் அமிழும்படி செய்யும் வலிமையை உடையவன். ‘வன்மதனை’ என்றும் பாடம்.

ஒண்பொடியா - விளக்கம் பெற்றச் சாம்பராகும்படியாக. நோக்கி —நெற்றிக் கண்ணால் பார்த்து. கண்ணைத் திறத்து நோக்கிய ஆளவிலே அவன் பொடியாகி விட்டான். அவனைச் சங்கரிப்பதற்கென்று இறைவன் பெருமுயற்சி ஏதும் செய்யவில்லை.

மன்மதன் கலங்கிய சிந்தையை உடையவன். இறைவன் மேல் அம்பை எய்ய வேண்டும் என்று அவனை தேவர்கள் ஏவிய போது முதலில் அவன் அதற்கு இசையவில்லை. ஆனால் தேவர்கள் வற்புறுத்தவே, விருப்பம் இல்லாமலே இறைவன்மேல் அம்புகளை எய்தான். தெளிவுள்ள சிந்தனை இல்லாமல் அதைச் செய்தான். அன்பர்களோ தெளிவுள்ள சித்தம் உடையவர்கள்.சேர்தல் என்பது இடைவிடாது தரிசிக்கும்படி இருத்தல்.

ஒளி நஞ்சம்-பளபளப்பாக ஒளியைப் பெற்ற நஞ்சு. இறைவன் திருக்கழுத்தினுள் சென்றும் அதன் நிறம் புறத்தே தெரிவதிலிருந்து அது புலப்படும்.

வாய் அஃது: அஃது, பகுதிப் பொருள் விகுதி. இருள்— கரிய நிறம்; “இருளின் உருவென்கோ” என்று முன்பாட்டில் சொன்னார். கொண்டவாறு-அடைந்த விதம், என்-ஏன்: என்ன காரணம்?

‘சேர்வாய், இதனைக் கூறு’ என்க.]

அற்புதத் திருவந்தாதியில் வரும் 89-ஆம் பாட்டு இது.