பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

551

அவ்வாறு உண்மையாக, உள்ளார்ந்த அன்புடன் 'பொருந்தி அவனையே விரும்பவேண்டும். வானோருக்கே வேண்டியவற்றை வழங்கும் அவன் நமக்கு வேண்டியவற்றையும் தரும் அருளாளன். எவனை விரும்பினால் எல்லாம் கிடைக்குமோ, அவனையே விரும்ப வேண்டும். ஒவ்வொரு பொருளை ஒவ்வொரு சமயம் நமக்கு வழங்கும் கொடையாளர்களை நாடிச் சென்றால் அவர்கள் வழங்கும் பொருள் பல நாள் நில்லாது. நமக்கு வேண்டியவற்றைப் பெறுவதற்கு வெவ்வேறு வள்ளல்களிடம் போய் நிற்கவேண்டும். அவ்வாறு இன்றி எல்லாவற்றையும் ஒருங்கே தரும் ஒரு பெருவள்ளலிடம் போய் அன்பு செய்தால் அவரால் எல்லாவற்றையும் பெறலாம். வேறு ஒருவரிடம் சென்று கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லாமற் போய்விடும்.

ஆகவே வானோர் பிரானாகிய சிவனையே மெய்யாக விரும்பி அன்பு செய்ய வேண்டும். இதைச் சொல்கிறார் அம்மையார்.

மற்று அவன்பால் நன்னெஞ்சே
மெய்த்து அமர்ந்து அன்பாய் நீ விரும்பு.

‘என்னுடைய நல்ல நெஞ்சமே, சிவபெருமானே எல்லாக் காலத்தும் வானோர்களுக்குத் தலைவனாய் அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் பரமோபகாரியாக இருப்பவன்; இதனை நீ தெரிந்து கொள். அவனே அழகிய பவள வண்ணத் திருமேனியை உடையவன்; இதையும் அறிந்து கொள். அவனே மைநிறம் பெற்றுப் பொருந்திய திருக்கழுத்தை உடையவன்; இதனையும் நீ உணர்ந்து கொள். அவனிடம் உண்மையாகத் தங்கி அன்பாக இருந்து அவனை விரும்புவாயாக.’

[அவன் : உலகறி சுட்டு. கண்டாய் என்று அடுத்தடுத்துச் சொன்னார், மனம் வேறு பொருளில் பற்று அறுதற் பொருட்டு. பிரான்-தலைவன், உபகாரி. ஆவான் என்பது