பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

554

வார்கள். பின்னும் நெருக்கம் வேண்டினால் தம் நாக்கிலும் மார்பிலும் வைத்துக்கொள்வார்கள். ஆனால் நீ அவளுக்கு உன் திருமேனியில் ஒரு பாதியையே வழங்கியிருக்கிறாய். அவளும் நீயும் சேர்ந்து ஒருவடிவமாக இருக்கிறாய். இதற்குக் காரணம் என்ன?’ என்று நினைத்துச் சொல்லத் தொடங்குகிறார்.

“அம்மையிடம் உனக்குள்ள சிறந்த காதலால், அவளை ஒருகாலும் பிரிந்திருக்கக்கூடாது என்று இப்படி ஒட்டிக் கிடக்கிறாயோ?” என்று முதலில் ஒரு வினாவை எழுப்புகிறார்.

விருப்பினால் நீ பிரியகில்லாயோ?

'அன்றி அவளைத் தனியே வைக்கவேண்டும் என்று விரும்பிப் பல இடங்களைத் தேடி நீ இல்லாத இடமே இல்லாமையால் வெளிப்படையாகவே இப்படி வைத்துக் கொள்ளலாம் என்று திருவுள்ளம் கொண்டாயோ? உனக்கு வேறான இருப்பிடம் பிறிது ஒன்று இல்லையோ?’

வேறா
இருப்பிடம் மற்று இல்லையோ?

'மலைக்கு மகளாகப் பிறந்த பார்வதிதேவி உன்னைப் பிரிந்து தனியாக இருக்க அஞ்சுவாளோ? உன்னுடைய விருப்பம் காரணமாக இணைத்துக்கொண்டிருக்கலாம். அவளைப் பிரியாமலே இருக்கவேண்டும் என்ற உன் காதலுணர்ச்சியே அவளோடு ஒட்டி இணைந்து நிற்பதற்குக் காரணமாக இருக்கலாம்; அல்லது அந்தப் பெருமாட்டி உன்னைப் பிரிந்து தனியாக இருப்பது அவளுக்கு அச்சத்தைத் தரலாம். உன் விருப்பம் இந்த இணைப்புக்குக் காரணமா? அல்லது அவளுடைய அச்சம் காரணமா? இதைச் சொல்ல வேண்டும்.'