பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98. செந்தீ அழல்


இறைவன் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம் என்ற மூன்று தொழிலையும் செய்கிறான். அந்த மூன்று தொழில்களையும் தன் ஆணையால் பிரம்ம விஷ்ணு ருத்திரர்களைச் செய்யச் சொல்லி அவர்களுக்கு வேண்டிய ஆற்றல்களை அருளுகிறான்.

“மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில்
இயற்ற வாளா, மேவு அண்ணல்”

என்று பரஞ்சோதி முனிவர் கூறுவார்.

உயிர்க் கூட்டங்கள் தம் வினைக்கு ஏற்ப உடம்பை எடுத்துப் பிறந்தும் வாழ்ந்தும் இறந்தும் மீண்டும் பிறந்தும் வருகிறார்கள். ஒவ்வோர் உயிரும் இவ்வாறு பிறவிச் சுழலில் சுழன்று வருகிறது. மகாப் பிரளய காலத்தில் எல்லா உயிர்களுக்கும் ஓய்வு கொடுப்பது போல இறைவன் சர்வசங்காரம் செய்கிறான். ஜலப் பிரளயம், அக்கினிப் பிரளயம் என்பது போல் பிரளயங்கள் பல வகைப்படும். உலகமெல்லாம் நீரில் அமிழ்ந்து கிடப்பது ஜலப் பிரளயம்; தீயால் வெந்து அழிவது அக்கினிப் பிரளயம். காலாக்கினி ருத்திரர்களை அதிஷ்டித்து நின்று அக்கினிப் பிரளயத்தை நடத்துகிறான் இறைவன்.

இறைவன் அக்கினிப் பிரளயத்தை நிகழ்த்தும்போது எங்கே பார்த்தாலும் தீ மூண்டு நிறைந்து நிற்கிறது. தீக்கொழுந்துகள் பலபடியாகச் சீறி எழுந்து உலகை எரிக்கின்றன. அந்தர் மத்திய பாதலம் என்று சொல்லும் மூன்று தட்டாகிய உலகங்களும் அழலால் எரிந்து சாம்பலாகின்றன. அந்த மூன்று உலகங்களுக்கும் உள்ளே புகுந்து எல்லாப் பொருள்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டு அந்தச் செந்தீயின் அழலானது எழுந்து எரிகின்றது. அதன் நாக்குகளுக்கு