பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



102. பாடலின் பயன்


காரைக்கால் அம்மையார் இறைவனைப் பாடிய அற்புதத் திருவந்தாதி விளக்கம் இந்த பாட்டில் நிறைவுறப் போகிறது. இதுகாறும் நூறு வெண்பாக்களைப் பாடினார். இப்போது இறுதியில் 101-ஆவது வெண்பாவில் பயனைச் சொல்லப் போகிறார் . நூல்களின் முடிவில், ‘இதை ஓதினால் இன்ன நற்பயன் உண்டாகும்’ என்று சொல்வது மரபு. திருஞான சம்பந்தப் பெருமான் தாம் அருளிய ஒவ்வொரு பதிகத்தின் இறுதிப் பாசுரத்திலும், பயனைச் சொல்வார். இந்தப் பாமாலையை ஓதி இறைவனைப் புகழ்பவர்கள் இன்ன பயனைப் பெறுவார்கள் என்று சொல்கிறார் அம்மையார்.

அம்மையார் பாடிய இந்த நூல் இறைவனுக்குச் சூட்டிய பாமாலை; வாடாத மாலை. ஒரு பாட்டின் அந்தம் அடுத்த பாட்டின் ஆதியாகவும், இறுதிப் பாட்டின் ஈறு முதல் பாட்டின் முதலாகவும் இருத்தலால் இது அந்தாதி. அந்தாதியை வெவ்வேறு செய்யுட்களால் சொல்வதுண்டு. இது முழுதுவம் வெண்பாக்களால் அமைந்த அந்தாதி.

இம்மாலை அந்தாதி வெண்பா.

இந்த அந்தாதி பேயுருவம்பெற்ற காரைக்காலம்மையார் சொன்னது. இந்த இறுதிப் பாட்டில் அவர் தம்மைக் காரைக்கால் பேய் என்றே சொல்லிக்கொள்கிறார்.

கரைக்காற் பேய்சொல்.

இந்த மாலையை அன்பர்கள் வாயாரப் பாடி மகிழலாம். வாக்கினாற் பாடுபவர் சும்மா பாடினால் போதாது. உள்ளம்