பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

583

"காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி” என்ற தேவாரத்தில் காதலும் கசிவும் வந்தன.]

இந்தப் பாட்டில் ஈற்றில் உள்ள சொல் ‘பிறந்து’ என்பது. இந்த அந்தமே அந்தாதியின் முதற் பாட்டின் முதலில், ‘பிறந்து மொழி பயின்ற’ என்று வந்திருக்கிறது. இதை மண்டலித்தல் என்பர். பூவைச் சரமாகத் தொடுத்துச் சரத்தின் இரண்டு தலைப்பையும் முடிந்துவிட்டால் அது வட்டமான மாலையாகத் தோற்றம் அளிக்கும். அப்படியே இதுவும் வட்டமாக மண்டலமாகத் தோன்றுகிறது. அந்தாதி மண்டலித்து வர வேண்டும் என்பது இலக்கணம்.

இறைவனை இந்தப் பாமாலையால் துதிப்பவர்கள் சாமீப்பிய பதவியைப் பெறுவார்கள் என்பது கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியின் இறுதியில் வரும் 101ஆவது பாட்டு.