பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 118

செவிவழிக் கதையின் பேரால் உறுதிப்படுத்துகின்றார்கள். கொரம்பள்ளம் வரை சமுத்திரம் பொங்கிவந்த போது முதன்முதல் தூத்துக்குடி இங்கேதான் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், கடல் வரம்பு உள்ளே செல்லச் செல்லக் கிழக்குப் பக்கமாகவே தள்ளித்தள்ளி அவர்கள் வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள். இப்போது தூத்துக்குடி இருக்கும் இடம் வரை அவ்வாறே வீடு கட்டிக் கொண்டே சென்றனர். இந்தத் தூத்துக்குடி வெள்ளையர் வருகை வரையில் அங்கேயே இருந்தது. கொரம்பள்ளத்திலுள்ள பூமியின்மேல் காணப்படும் கடற்கிளிஞ்சில்களுக்குக் காரணம் சொல்ல இயலாத மக்கள், இந்தக் குறிப்பைக் கற்பனை செய்து வாய்மொழிக் கதையாய்க் கூறுகிறார்கள் என்று தோன்றுகிறது. நிலம் உயர ஆரம்பித்த காலம், இக்கதை கூறுவதுபோல, அவ்வளவு சமீப காலமாய் இருக்க இயலாதென்று நான் நினைக்கிறேன். ஆனால், ஒருவேளை திருநெல்வேலியில் மக்கள் வசிக்கத் தொடங்கிய காலத்திற்குப்பின் கடல் மேடிட்டிருக்கலாம் (பின் குறிப்புப் பார்க்க IV).

தூத்துக்குடியைப் பற்றிய நம்பத்தக்க குறிப்புகள்

தூத்துக்குடியில் போர்ச்சுகீசியர் குடியேற்றத்தை நிறுவியதைப் பற்றிய முதல் நம்பகமான செய்தியைச் சேவியரின் கடிதங்களில் நான் கண்டேன். அக்கடிதம், 1542 முதல் 1544 வரை தூத்துக்குடியிலிருந்தோ அதற்கு அருகேயுள்ள இடங்களிலிருந்தோ எழுதப்பட்டிருக்கின்றன. அப்பொழுது தூத்துக்குடியில் ஒரு கவர்னர் இருந்தார். அவரே கடற்கரையிருந்த மற்றக் குடியேற்ற நாடுகளுக்கும் கவர்னராய் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், சேவியர் தம் உதவியாளராகிய பிரான்ஸிஸ் மான்ஹியாசுக்கு எழுதிய கடிதங்களில் கவர்னரைப் பற்றிக் குறிப்பிடும்பொழுதுதெல்லாம் ஒருமையிலேயே எழுதுகின்றார். இதே அலுவலர்கள் பிற்காலத்தில் முத்துக்குளித்தலின் தலைவரென வழங்கப்பட்டிருக்கலாம். துத்துக்குடியைப் பற்றிய முக்கியமான கடிதம் அதன் அழிவைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அக்கடிதம் அலந்தாளியிலிருந்து 1544 செப்டம்பர் 5 ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. இந்த ஊர் பரவர்களின் சிறிய கிராமம். இது திருச்செந்தூருக்குத் தெற்கே மூன்று மைலில் உள்ளது. துத்துக்குடி கவர்னரைப் பயங்கர படகர்கள் (மதுரை நாயக்கர்கள்) தாக்கினார்கள். இச்செய்தியைத் தரும் சேவியருடைய கடிதம் புன்னைக்காயலிலிருந்த மான்ஹியாஜுக்கு எழுதப்பட்டிருந்தது. “இப்பொழுதுதான் தூத்துக்குடி கவர்னரைப் பற்றிய இரங்கத்தக்க செய்தியைக் கேள்வியுற்றேன். அவருடைய கப்பல் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. கரையிலிருந்த அவருடைய வீட்டிற்கும்