பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119 கால்டுவெல்


நெருப்பு வைக்கப்பட்டது. அவரிடமிருந்து எல்லாப் பொருள்களையும் கொள்ளைக்காரர் பறித்துக் கொண்டனர். அவர் மனமுடைந்து அனாதையாய்த் தீவிற்குத் திரும்பினார்.தருமத்தின் பெயரால் உன்னை நான் வேண்டுகின்றேன். பறந்து சென்று அவர் துயரம் துடை. உன்னுடன் கூட உன்னால் முடிந்தவரை புன்னைக்காயலில் உள்ள உன் ஆள்கள் அத்தனை பேர்களையும் உடன் அழைத்துச் செல். அங்கிருக்கும் எல்லா மரக்கலங்களிலும் உணவுப் பொருள்களை நிரப்பிக் கொண்டு முக்கியமாகக் குடிதண்ணீர் சேகரித்துக் கொண்டு செல். தாமதம் செய்யாது புறப்படு. ஏனெனில், சிறிது தாமதங்கூடத் துன்பத்தின் எல்லையிலுள்ள அவனுக்குப் பயனில்லாது போய்விடும். கம்பத்தூர் பெம்பாரி (பெம்பாரி என்பது ‘வேம்பாறு’ என்பதை ஒத்திருக்கிறது. நெடுநாளைக்கு முன்பாகவே சிலரால் தூரத்திலுள்ள கோயம்புத்தூர் என்று வழங்கப்படும் ‘கம்பத்தூர்’ காயற்பட்டினத்திற்கு அருகேயுள்ள கொம்புகீரையர் என்ற முத்துக் குளிக்கும் கிராமம் என்பதைக் கண்டுபிடித்தேன்.)யிலுள்ள படங்கர்களுக்கும் (தலையாரிகளுக்கும்) படங்காடு என்பதற்குப் பட்டங்கட்டி பட்டத்தை உடையவன் - என்பது பொருள்). பரவர் தலைவனுக்கு இப்படிப்பட்ட பெயரும் உண்டு) அவசரமாக நான் கடிதம் எழுதியுள்ளேன். அதில் அவர்கள் கவர்னருக்குச் செய்ய வேண்டிய கடமையின் இன்றியமையாமையும் அவர்களாலான எல்லா உதவிகளையும் உனக்குச் செய்யும்படியும் தெரிவித்திருக்கிறேன். உணவு, நல்ல தண்ணீர் முதலியவைகளைப் பல மரக்கலங்களில் நிரப்பச் செய். பல மரக்கலங்கள் அனுப்பப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். இம்மரக்கலங்கள் கவர்னர் அங்கே துரத்தப்பட்டது போலத் துன்பத்திற்குள்ளாகித் துரத்தப்பட்டு மலைகளில் ஒளிந்திருக்கும் பலவிதமான மக்களையும் நாட்டிற்கு அழைத்துவரப் பயன்படும் என்று எழுதியுள்ளார். மேலும், ‘அதே துன்பம் எல்லாக் கிறித்தவர்களையும் பிடித்திருக்கிறது’ என்றும் குறிப்பிடுகிறார். அறிந்து கொள்ள இயலாத காரணங்களால் சீக்கிரத்திலேயே இத்தகைய துன்பங்களுக்கு ஒரு முடிவு ஏற்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு சேவியர் மான்ஹீயஸுக்கு திரும்பவும் எழுதுகிறார்: ‘நாடு கடத்தப்பட்ட முத்துக் குளிப்பவர்களாகிய கிறிஸ்தவர்களின் வீட்டைக் கைப்பற்றியிருக்கும் யாருக்கும் முத்துக்குளியலில் வேலை கொடுக்க வேண்டாமென்று நான் கூறியதாக என் பர்மோஸாவிடம் கூறு. (அப்பொழுது அவரே கவர்னர் அல்லது முத்துக் குளிப்பவர்க்குத் தலைவர்). இது பற்றி எனக்கு அரசரும் வைஸ்ராயும் அதிகாரம் அளித்திருக்கின்றமையால், நான்