பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 120


இதை உறுதியாகத் தவிர்க்க எண்ணுகிறேன். “சேவியரின் வாசகத்தைக் கவனிக்கும்போது அவர் அதிகமான அதிகாரங்கள் பெற்ற அரச கமிஷனராயிருந்திருக்க வேண்டுமென்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் போர்ச்சுகல் அரசனிடமிருந்து முத்துக்குவியல் வேலை முழுவதும் கிறிஸ்தவர் வசமாய் இருக்க வேண்டுமென அதிகாரப்பூர்வமான கட்டளையையும் பெற்றார்.

முன்போலவே கீழ்க்காணும் தூத்துக்குடி பற்றிய செய்திகளுக்கு நான் டாக்டர் பர்னலுக்கு மிக்க கடப்பாடுடையேன்.

சேவியர் கடற்கரையிலிருந்த காலமாகிய 1544 இல் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்துவந்த இடங்கள் தூத்துக்குடியும் மணப்பாடுமாகும் என்று 1560 இல் எழுதிய கொரியா என்பவர் கூறுகிறார்.

1582 இல் தூத்துக்குடியில் ஒரு கிறிஸ்தவக் கோவில் கட்டப்பட்டதென டிசெளஸா கூறுகிறார். அது நோஸா சென்ஹாராடா பெய்டாடி என்பவருக்கு உரிமையாக்கப்பட்டது என்றும் முதல் பூசை அன்று 600 பேர் திருவமுது (உணவு) பெற்றனர் என்றும் அதில் கூறியிருக்கிறது. இந்தப் பெயர் தவறான பெயராயிருக்கலாமென்று தோன்றுகிறது. இக்கோவில் தொடர்பான பெயரை ‘ரோமன் கத்தோலிக்க மதபோதகர்’ என்ற அத்தியாயத்தில் 1600 இல் குவரிரோ எழுதிய வாசகத்தை நோக்குக.

1596 இல் ஏற்பட்ட லஞ்சோடன் உலகப்படத்தில் காயல் மட்டும் இருக்கிறது. தூத்துக்குடி குறிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முத்துக்குளித்தல் தலைவனைப் பற்றிய குறிப்பை மட்டும் அவர் கொடுத்திருக்கிறார்.

துத்துக்குடி, மணப்பாடு, புன்னைக்காயல், கொம்பு கீரையூர், ஆலந்துளை, காயல், தாளை, வீரபாண்டியன் பட்டணம், வேம்பாறு, குரிம் (புதுக்குடி), திருச்செந்தூர் பட்டினம் முதலிய இடங்கள் கடற்கரையிலும் அதை அடுத்துள்ள பகுதிகளிலும் இருப்பதை நான் கண்டேன்.

1658 இல் டச்சுக்காரர்கள் போர்ச்சுகீசியரிடமிருந்து தூத்துக்குடியைக் கைப்பற்றியதைப் பற்றி பல்டியஸ் கூறுகிறார். கடற்கரையிலிருந்து கிறிஸ்தவ கோயில்களைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கின்ற அவர் போர்ச்சுகீசியக் குடியேற்ற நாட்டைப் பற்றி எதுவும் கூறவில்லை. அக்காலத்தில் போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தைத் தொடங்கும் போது கடற்கரையிலிருந்த இடம் தூத்துக்குடி ஒன்றுதான்