பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

117



திராவிடம் ஆஸ்திரேலியம் திபேத்தியம் சீனம்
தன்மை
ஒருமை
நான், யான்,
நா,என்
ங,ஙைஇ,
ஙத்ஸ,ஙன்ய
ங,ஙெ,ஙெத் ஙொ


ஒத்திருக்கிறது. தெலுங்கில் பன்மை லு என்ற விகுதி சேர்ப்பதால் ஏற்படுகிறது. அதே போன்று ஆஸ்திரேலிய மொழிகளிலும் லு, லி, ட்லு, ட்லி இவற்றைச் சேர்ப்பதால் பன்மை ஏற்படுகிறது. இந்தியாவின் வடகிழக்கிலுள்ள மொழிகளும் இவ்வகையில் தெலுங்கை ஒத்துள்ளன. எடுத்துக்காட்டாக, திமல்[1] நா (=நீ) என்பதன் பன்மை நியெல் (=நீர், நீங்கள்) என்பதாம். தன்மையிலும் ஆஸ்திரேலிய மொழியின் இருமைப் பெயர்கள், பன்மைப் பெயர்கள் ஙலு, ஙட்லு, ஙட்லி, ஙலத என்பன போன்றவை. இதனுடன் தெலுங்குப் பெயர்கள் பன்மையாகும் முறையைக்கூர்ந்து நோக்குக. (எ-டு): வா(ண்)டு (=அவன்), வா(ண்)ட்லு (=அவர்கள்) ; தமிழிலுங்கூட 'நான்' என்பதன் பன்மையான 'நாங்கள்' இதனை மிகவும் அடுத்திருப்பது காண்க !

ஆஸ்திரேலிய முன்னிலை இடப்பெயர்களும், திராவிட முன்னிலை இடப்பெயர்களும் தன்மை, பன்மை இரண்டிலும் தெளிவாக ஒத்திருக்கின்றன. அதிலும் விகுதியுடன் மட்டுமன்றிப் பகுதியிலும் முழு ஒற்றுமை இருப்பதுங் காண்க! திராவிட மொழிகளில் பொதுப்படையான (முன்னிலைப்) பெயர்களின் ஒருமை நீன் என்பதும், பன்மை நீம் என்பதும் ஆம். இவற்றுள் நீ என்பதே பகுதிப் பொருள்


  1. Dhimal