பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கால ஆராய்ச்சி பலரால் தத்தம் கால அரசர், வள்ளல்கள் முதலியோரைப் பற்றிப் பாடப்பெற்றவை; அக்காலப் போர்களைப் பற்றியவை: அறம், பொருள், வீடு என்னும் மூன்றையும் பற்றியவை. ஆதலின், அவற்றுள் நம்பத்தகாதன என்று ஒதுக்கித் தள்ளத்தக்க செய்திகள் இருத்தல் அருமையினும் அருமை. சுருங்கக் கூறின், புறநானூறு, மிகப்பழைய காலத் தமிழ் மக்கள்.சிற்றரசர்.பேரரசர்.கொடையாளிகள்-புலவர் இவர்தம் வாழ்க்கைகளையும் நாகரிகப் பண்புகளையும் நன்கு விளக்கும் வரலாற்று நூலாகும். அதனை நன்கு ஆராய்ந்து முறைப்பட வைத்து எழுதப்புகின், பண்டைத் தமிழக வரலாறு' என்னும் ஒப்புயர்வற்ற, 'வரலாற்று நூலை ஒருவாறு எழுதி முடிக்கலாம் என்பதை அழுத்தமாக அறையலாம். இது நிற்க. அறம், பொருள், வீடு என்னும் புற ஒழுக்கம் பற்றிய நானூறு பாக்களின் தொகுதியே புறநானூறு என்பது. இதில் உள்ள பாடல்களைப் பாடிய அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் முதலிய புலவர், பல்வேறு காலங்களில் வாழ்ந்தவர் ஆவர். இந்நூல் தொகுக்கப்பெற்ற காலத்தில் இப்புலவர் சிலருடைய பெயர்கள் புலனாகவில்லை. ஆதலின் தொகுத்தவர்கள், பாவடிகளிற் பயின்றுவரும் தொடர்களையும் பாக்களிற் காணப்படும் சிறப்பியல்புகளையும் கொண்டு தம் மனம்போனவாறு அடிக்குறிப்பில் புலவர் பெயர்களை ஆக்கியிருத்தல் அறிவுடையார் அறிந்ததே ஆகும். சான்றாக, ஒரூஉத்தனார், ஒரு சிறைப் பெயரியனார், ஒரேர் உழவர், கூகைக் கோழியார், தொடித்தலை விழுத்தண்டினார், தும்பி சொகினனார், வெள்ளெருக்கிலையார், வெள்ளைமாளர் முதலிய பெயர்களைக் காண்க. மொழி ஆராய்ச்சியிற் புகினும், சில பாக்களின் நடை வேறுபட்டிருப்பதை நன்குணரலாம். செய்யுட்களிற் கூறப்பட்டுள்ள செய்திகளை நோக்கினும் இஃது உண்மையாகிறது. தமிழர்க்கே உரிய தனிப்பட்ட நாகரிகப் பண்புகளும் அவருடன் பிற்காலத்தே கலந்த வடமொழியாளர்க்கேஉரிய பண்புகளும் இந்நூற்கண் இடம் பெற்றுள்ளன. வேள்வி அந்தணர் முத்தி, இதிகாசக் கதைகள், இந்திரன் பிரமன் பலராமன் முதலியோர் வழிபாடுகள் முதலியன புதியனவாய்த் தமிழகத்தில் நுழைந்தனவாகும். இராயசூயம் (இராஜசூய யாகம்) வேட்டபெருநற்கிள்ளி, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னர்களைப் பற்றிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. எனவே, தமிழ் மன்னர்கள் வேதவேள்விகளைச் செய்யத் தலைப்பட்டுவிட்டனர் என்பது இத்தொடர்களினால் நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/10&oldid=793091" இலிருந்து மீள்விக்கப்பட்டது