மாணிக்கவாசகர் காலம் 117 (3) மாணிக்கவாசகர், வரகுணனாந் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மயலோம்பி இருங்களியானை வரகுணன் என்று தம் திருக்கோவையில் வரகுண பாண்டியனைக் குறித்திருத்தலால், அப்பாண்டியன் காலத்தவர் என்று கருத இடமுண்டு. பாண்டியர் பட்டியலில் வரகுணன் என்ற பெயருடன் இருவர் காணப்படுகின்றனர். முன்னவன் பின்னவனுக்குப் பாட்டன். முதல் வரகுணன் காலம் கி. பி. 765-815. இரண்டாம் வரகுணன் காலம் 862-880” முதல் வரகுணன் காஞ்சிவாய்ப் பேரூரில் திருமாலுக்குக் குன்றமன்னதோர் கோவில் எடுப்பித்தான். இவன் பரம வைஷ்ணவன் என்று சென்னைப் பொருட் காட்சிச் சாலைப் பட்டயங்கள் குறிக்கின்றன. இவன் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் வணக்கம் கூறியுள்ளான். திருச்சிராப்பள்ளி, அம்பா சமுத்திரம் கல்வெட்டுக்கள் இவனது சிவப்பணியைக் குறிக்கின்றன. இவன் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலுக்கும் தருமம் செய்துள்ளான். இவனது ஆட்சி பாண்டிய நாட்டுக்கப்பால் தஞ்சை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்துார் என்னும் மாவட்டங்களிலும் பரவியிருந்தது. மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்ட வரகுணன் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தடிகளால். வெள்ளை நீறு மெய்யிற் கண்டு....... பெரிய அன்பின் வரகுண தேவரும், என்று பாராட்டப்பட்டனன். அப்பாண்டியனைக் கி. பி , 10ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி கோவில் திருப்பண்ணியர் விருத்தத்தில் பாராட்டியுள்ளார். ஆனால், இப்பாண்டியன் செயல் அப்பர், சம்பந்தர், சுந்தரரால் குறிக்கப்படவில்லை. இவற்றை நோக்க, வரகுணன் தேவார ஆசிரியர் மூவர்க்கும் பிற்பட்டவன் என்பது தெளிவு. இவனைப் பிற்பட்ட கல்லாடர், திருவிளையாடற் புராண ஆசிரியன்மார், திருவிடைமருதூர்ப் புராண ஆசிரியர் தத்தம் நூல்களில் சிறப்பித்துப் பாடியுள்ளனர் என்பதும் இங்கு அறியத்தகும். (4) அத்துவைதம் என்று வழங்கும் ஏகாத்தும வாதம் அல்லது மாயாவாதம் தேவார ஆசிரியர்களால் குறிக்கப்படவில்லை. சங்கரர் காலத்தில்தான் மாயாவாதம் ஓங்கியது. சங்கரர் காலம் கி. பி. 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு என்று சொல்லலாம். இம்மாயாவாதத்தைக்
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/126
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை