மாணிக்கவாசகர் காலம் 123 மணிவாசகர் திருக்கோவையாரைப் பாடவில்லை என்றும், 'திருவாதவூர்ச் சிவபாத்தியன் திருக்கோவை செய்தான் என்றும் நம்பியாண்டார்நம்பி கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில் கூறியிருத்தலால், திருக்கோவையார் பாடியவர் சிவபாத்தியன் என்பவரே என்றும் சிலர் கருதுகின்றனர். கொழும்புப் பொருட்காட்சிச் சாலையில் உள்ள மாணிக்கவாசகர் செப்புப்படிமம் பனையோலையைக் கையில் ஏந்தியிருப்பதாகக் காணப்படுகிறது. அப்பனையோலைமீது "நமசிவாய" என்பது எழுதப்பட்டுள்ளது. அப்படிமம் கி.பி. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறிஞர் கருதுகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூர் கிராமத்தில் 1933 இல் கண்டெடுக்கப்பெற்ற மணிவாசகர் செப்புப் படிமத்தின் இட உள்ளங்கையில் “ஓம் திருவளர் தாமரை சி" என்பது பொறிக்கப்பட்டுள்ளது. இப்படிமத்தின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்று அறிஞர் கருதுகின்றனர். திருவாசகத்தின் தொடக்கம் "நமசிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க" என்பது. அதுவே கொழும்புப் பொருட்காட்சிச் சாலையில் உள்ள மணிவாசகர் படிமத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. திருக்கோவையாரின் தொடக்கம், திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லை என்பது. இத்தொடக்கமே மதுக்கூரில் கண்டெடுக்கப்பட்ட மணிவாசகர் படிமத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே, திருவாசகமும் திருக்கோவையாரும் மணிவாசகரால் செய்யப்பட்டவையே என்பது தெளிவாதல் காண்க." வரகுணவர்மர் இருவருள் மணிவாசகர் எவர் காலத்தைச் சேர்ந்தவர்? முதல் வரகுணன் வேண்ாட்டுத் தலைவனுடனும் கொங்கு நாட்டை ஆண்ட அதிகனுடனும் மிகுதியாகப் போரிட்டவன். இரண்டாம் வரகுணன் சோழ நாட்டிலுள்ள இடவை, திருப்புறம்பியம், வேம்பில் இவ்விடங்களில் போர் நடத்தியவன்; திருப்புறம்பியப் போரில் சோழன், பல்லவன், மேலைக்கங்க அரசன் ஆகிய மூவருடனும் போரிட்டவன். இங்ங்னம் பாண்டிய நாட்டை விட்டுச் சோழநாடு சென்ற இவன் சிதம்பரம் சென்று மணிவாசகர் குறிப்பிட்டபடி சிற்றம்பலத்துப் பெருமானை வழிபட்டிருத்தல் கூடியதே. கீழ்வரும் உண்மைகளாலும் இது பொருந்துதல் காண்க.
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/132
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை