பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கால ஆராய்ச்சி கோடல் பொருத்தமாகும். இச்சேரலாதனும் முடிநாகராயரும் பாரதகாலத்தவரே என்பதை மகாவித்துவான் இரா. இராகவையங்கார் அவர்கள் தெளிவாக விளக்கி எழுதியிருத்தல் இன்புறத்தக்கது.' - வரலாற்றுப் பேராசிரியராகிய திரு பி.டி. சீநிவாச அய்யங்கார், ‘உதியன்சேரல் பாரத வரலாற்றைக் கதகளி போன்ற நடிப்பு நாடகமாக நடத்தி அதன் இறுதியில் நடித்தவர்க்கும் பொதுமக்களுக்கும் பெருஞ் சோறு வழங்கியிருத்தல் வேண்டும்" என்று கூறியுள்ளார்." இக்கருத்துத் தவறு என்பதை மகாவித்துவான் அவர்கள் தமிழ் வரலாறு' என்னும் தமது நூலில் தக்க காரணம் காட்டி மறுத்துள்ளார். உதியன் சேரலின் முன்னோன் ஒருவன் பெருஞ் சோறு கொடுத்த செயலை முடிநாகராயர், பின்னோனாகிய உதியன் சேரல்மீது ஏற்றிக் கூறினார் என்று கூறுவாரும் உளர்." இங்ங்னம் கருதுவதும் தவறு என்பதை மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார். Þ Í உதியன் சேரல் சேர மன்னருள் காலத்தால் மிகவும் முற்பட்டவன் என்பதை நினைவூட்டவே புறநானூற்றில் அவனைப் பற்றிய பாடல் கடவுள் வாழ்த்தையடுத்து முதற் பாடலாக வைக்கப் பெற்றுள்ளது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆகிய இருவருக்கும் தந்தையான உதியஞ்சேரல் என்பவன் வேறாவான். 12 தருமபுத்திரன் (கி. மு. 1000) - 'அறவோன் மகனே, மறவோர் செம்மால் என்று புறப்பாட்டில் (366) கோதமனார் என்பவரால் பாடப் பெற்ற தருமபுத்திரன் தமிழ்நாட்டு அரசனாகக் காண்கிலன். இவன், யமதருமன் மகன், பாண்டவருள் மூத்தவன் என்பதே பொருத்தமாகத் தெரிகிறது. பாரத வரலாறு ஏறத் தாழக் கி.மு. 1000-த்தில் நடைபெற்றதாக முன்பு கொள்ளப்பெற்றது. இங்ங்னம் கொள்ளின், இப்புறப்பாட்டிற்கண்ட தருமபுத்திரன், அவனைப்பாடிய கோதமனார்" ஆகிய இவர்தம் காலம் ஏறத்தாழக் கி.மு. 1000 என்னல் தவறாகாது. "....... இவற்றால் வடநாட்டுப் பாண்டவர் ஐவர்க்கும் தமிழரசர்க்கும் பல்வகையினும் தொடர்புண்மை நன்கு தெளியலாம். இத்தொடர்புண்மையால், கோதமனார் தருமபுத்திரர்க்கு அறிவுறுத்தியதென்று நந்தமிழ்ப் பெருமக்கள் துணிந்த இச் செய்யுளின் பழமை நன்கு துணியலாம்" என்று பெரும் புலவர் ரா. இராகவையங்கார் குறித்திருத்தல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/14&oldid=793186" இலிருந்து மீள்விக்கப்பட்டது