136 கால ஆராய்ச்சி அரசன், அங்ங்ணமாயின், அச்சிவகதை எது? அது கற்றவர் யார்? அது சீவகசிந்தா மணியைப்போல் இடையில் வந்த சிவகதையோ? புராணமோ? முன்னூல் உண்டோ? அதனை இவ்வுலகிற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்? முறையாகக் கூறுக’, என்றான். உடனே சேக்கிழார், தில்லைப்பிரான் அடியெடுத்துத் தரச் சுந்தரர் பதினொரு திருப்பாட்டாக அடியவரைப் பற்றித் தொகை பாடினார். அதனைத் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் விளக்கிக் கூற, அவர் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பி, திருத்தொண்டர் திருஅந்தாதி என்றொரு நூல் பாடினார். அந்நூலைத் திருமுறைகண்ட இராசராச தேவர் முதலியோர் பாராட்டினர், என்றார். அது கேட்ட சோழன் மகிழ்ந்து, அவ்வடியார் வரலாற்றைக் கூறுக’, என்றான். சேக்கிழார் அடியார் வரலாறுகளைத் தொகைவகைகளைக் கொண்டு விளங்கவுரைத்தார். கேட்டு மகிழ்ந்த மன்னன், இவ்வரலாறுகளைப் பெரியதோர் காவியமாக நீரே பாடியருள்க' என்று, அவருக்கு வேண்டிய ஆள் உதவி, பொருள் உதவி தந்துதில்லைக்கு அனுப்பினான். - "தில்லையை அடைந்த சேக்கிழார் கூத்தப்பெருமான் திருமுன் நின்று, 'அடியேன், புகழ் பெற்ற உம் அடியார் சிறப்பை எங்ங்னம் உரைப்பேன்? எனக்கு அடி எடுத்து உதவி அருள்க', என்று வேண்டினார். அவ்வமயம் உலகெலாம் என்ற சொல் சேக்கிழார் செவியிற்பட்டது. அவர் அதனையே முதலாகக் கொண்டு பாடிப் புராணத்தை முடித்தார். அரசன் தில்லையை அடைந்தான். தில்லை ஆயிரக்கால் மண்டபத்தில் பெருஞ்சைவர் கூட்டத்தில் சேக்கிழார் தமது புராணத்தை அரங்கேற்றம் செய்தார்; இறுதியில் அரசனால் பெருஞ்சிறப்புப் பெற்றார்; 'தொண்டர்சீர் பரவுவார் என்ற பெயரும் பெற்றார். "அரசன் சிறந்த பக்திமானாகிய சேக்கிழாரைத் தன்கீழ் வேலையில் வைக்க விரும்பாமல், அவர் தம்பி பாலறாவாயரைத் ”தொண்டைமான் என்ற பட்டத்துடன் தொண்டைநாட்டை ஆளும்படி விடுத்தான். அவர் தொண்டை மண்டலம் நின்று காத்த பெருமாள்' என்னும் பெயர் பெற்றார். "பின்னர்ச் சேக்கிழார் தில்லையில் தங்கிக் கூத்தப்பெருமானைச் சேவித்துக்கொண்டிருந்து முத்தி பெற்றார். சேக்கிழார் மரபினர் இன்றுவரை அரசியல் உயர் அலுவலராக இருந்து வருகின்றனர். இனியும் இருப்பர். كبير இவ்வரலாறு பற்றிய ஆராய்ச்சி
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/145
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை