சேக்கிழார் காலம் {43 கல்வெட்டுக்களை மேலிருந்து கீழ்நோக்கி வெட்டிவந்தனர் என்பது கூறக்கூடவில்லை. அங்ங்னம் வெட்டவும் முடியாது; கல்வெட்டுச் செய்தியின் அளவு, அது வெட்டத்தக்க வசதியான இடம் இவற்றை நோக்கி வெட்டலே இயல்பாதலின் என்க. மேலும், திருப்புறம்பியத்துக் கோவில் சோழர் காலமுதல் இன்று வரை புதுப்பிக்கப்படவில்லை என்று திட்டமாகக் கூறத் தக்க சான்றில்லை. திருவொற்றியூர், எண்கண், திருக்கடம்பூர், கானாட்டுமுள்ளுர் முதலாய கோவிற் கல்வெட்டுக்களில், முறைபிறழ்ந்தும் தலைதடுமாறியும் உள்ள கல்வெட்டுக்கள் பலவுண்டு. சிறப்பாக எண்கண் என்ற இடத்தில் உள்ள பழுதுபட்ட சிவன் கோவிற் கல்வெட்டுக்களும் கானாட்டு முள்ளுர்ச் சிவன் கோவிற் கல்வெட்டுக்களும் காணத்தக்கவை. மூன்றாம் குலோத்துங்கன்: பேரம்பலம் பொன்வேய்ந்தவன் அல்லன் மூன்றாம் குலோத்துங்கன் கட்டிய திரிபுவன வீரேச்சரம் என்ற சிறப்புடைக் கோவிலில் உள்ள வடமொழிச் சுலோகங்கள் அம்மன்னன் செய்தனவாகக் கூறுவன காண்க: (1) அவனுடைய சோழ-ஈழ-சேர நாட்டு வெற்றிகள். (2) அவன் தில்லையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்று இவற்றைப் பொன்மயமாக்கினான். (3) ஈடும் எடுப்பும் அற்ற சிவபக்தன். (4) காஞ்சி ஏகாம்பரர் கோவில், மதுரைச் சிவன் கோவில், திருவிடைமருதூர்க் கோவில், தாராபுரத்தில் உள்ள இராசராசேச்சரழ் திருஆரூர்ப் பெருங்கோவில் இவற்றைப் பொன்மயமாக்கினான்.” இக்கல்வெட்டில் மூன்றாம் குலோத்துங்கனான திரிபுவன வீரதேவன் பேரம்பலம் பொன்வேய்ந்தான் என்பது குறிக்கப்படாமை காண்க. அவன் தில்லையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்று இவற்றையே சிறப்புறச் செய்தான் என்று இக்கல்வெட்டுக் கூறுகின்றது. கூறவே, மூன்றாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன்வேய்ந்தவன் அல்லன் என்பது பெறப்பட்டதன்றோ? மேலும் சேக்கிழார் காலத்தரசன் அநபாயன் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அச்சிறப்புப் பெயர் மூன்றாம் குலோத்துங்கற்கு உண்டு என்று கூறச் சான்றின்மை காண்க.
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/152
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை