8 கால ஆராய்ச்சி காஞ்சி (வரிகள் 75 - 78; 763 - 781) முதலிய நூல்களிலும் குறிப்புக்கள் பலவாகக் காண்கின்றன. இவனே சமயக்கீர்த்தி எனப்பட்டவன். இவன் பாக்கள் நற்றிணையில் (105, 228) இரண்டுண்டு. இவன் கவியரங்கேறிய பாண்டியன் எனக் களவியல் உரை கூறல் காண்க. சயமாகீர்த்தி அல்லது ஜயமாகீர்த்தி என்பதில் உள்ள ஜய' என்பது யவத் (ஜாவா) தீவத்தின் பெயரால் கல்வெட்டு வல்லார் அறிந்தது. அங்குள்ள பிற்காலத்துக் கல்வெட்டு ஒன்று மீன் இலச்சினையுடன் கிடைத்துள்ளது. இதனால் சயமாகீர்த்தி என்பது 'ஜயஸ்தானத்து மகாகீர்த்தியன் என்னும் பொருளுடையதேயாகும். இவன் 'அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி' எனச் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பெறல் - நெடுந்துரம் கடலிற் சென்று நிலங்கண்டு, அந்நிலத்துத் தன் அடிகளை வைத்து, ஆண்டுள்ள கடல் அலம்பும்படி நின்றதேயாம். பேரரசன் தன் அடிகளைப் பாறைகளிற் பொறித்து அவற்றை நீர் அலம்பும்படி வைக்கும் செய்தி ஜாவாவில் பூரீபூர்ணவர்மன் கல்வெட்டுக்களிற் கேட்கப்படுகிறது. "பூரீமானும் பூர்ணவர்மனும் அவனிக்குப் பதியும் அடிவைத்தவனுமாகிய தருமா நகரத்தலைவனுடைய விஷ்ணு (அடிகளை) ஒத்த இணை அடிகள் (Ind Ant, III, 335 - 358). இது யவத்வீபத்துச் சீர் அருடன் யாற்று நடுவிலுள்ள பெரும்பாறையில் நீர் அலம்பு நிலையில் உள்ளது... இங்ங்னம் அடிபொறிக்கும் வழக்கம் நெடியோன் காலமுதல் அங்கு உண்டாயிற்று என்று உய்த்து உணரலாகும். "இங்ங்னம் நெடியோன் பெருங்கடலகத்து நிலங்கொண்ட செய்தி மதுரைக் காஞ்சியுள், வானியைந்த இருமுந்நீர்ப் பேஎநிலைஇய இரும்பவ்வத்துக் கொடும்புணரி விலங்குபோழ சீர்சான்ற வுயர்நெல்லின் ஊர்கொண்ட உயர்கொற்றவ என்று (வரி 75 - 88) குறிக்கப்படல் காண்க. நெல் - சாலி; நெல்லின் ஊர் -சாலியூர், இன்றைய சாரியூர் (Sahi). இது ஜாவாத் தீவில் மதுரை என்ற தலைநகர்க்கு நான்கு கல் தொலைவில் உள்ள கடற்றுறைப் பட்டினம். "ஈண்டு மிகப் பிற்பட்ட காலத்தும் இந்நாட்டை வென்று கொண்ட மாறன் பெயரும், அவன் மதுரையும் (சுமதுரா), பாண்டியர்
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/16
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை