சேக்கிழார் காலம் や 155 அவரைப் பெரியபுராணம் பாடச் செய்திருக்கலாம்; அல்லது, இவற்றை இளவரசனான இராசராசன் வாயிலாக உணர்ந்து அநபாயன் சேக்கிழாரைப் பெரிய புராணம் பாடச் செய்து சிறப்பளித்திருக்கலாம். சீவகசிந்தாமணி பற்றிப் பெரிய புராணம் எழுந்தது என்னும் கூற்றுப் பொருத்தம் அற்றது. (5) சேக்கிழாருக்குப்பின் அவர் தம்பி பால்றாவாயர் சோழர் அரசியலில் உயர்வடைந்திருக்கலாம். சேக்கிழார் இரண்டாம் இராசராசன் காலத்திலும் (கி.பி. 1162) உயிருடன் இருந்தவராவர். (6) பெரிய புராணத்தில் பற்றுக்கொண்ட இரண்டாம் இராசராசன் தான் கட்டிய இராசராசேச்சரம் மூலத்தான புறச் சுவர்களில் நாயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகளைச் சிற்பங்களாகச் செதுக்குவித்தான் போலும்! (7) சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணமே இரண்டாம் இராசதிராசன் காலத்தில் (ஏறத்தாழக் கி.பி. 1174 இல்) திருவொற்றியூர்க் கோவிலில் நடந்த பங்குனி உத்தர விழாவில் படிக்கப்பட்டதாகலாம். - (8) சேக்கிழார் புராண ஆசிரியர் சைவ சமய ஆசாரியராகிய புகழ் பெற்ற உமாபதி சிவாச்சாரியர் என்னல் பொருந்தாது. அதனை எழுதியவர் இவரினும் வேறாவர்; ஆயினும், அவர் கூறும் சேக்கிழார் பற்றிய செய்திகள் பெரும்பாலும் கல்வெட்டு ஆராய்ச்சிக்குப் பொருந்துவனவாக இருத்தலால், அவர், சேக்கிழார் வரலாறு நாட்டில் நன்றாய்ப் பரவியிருந்த காலத்தவர், உமாபதி சிவத்திற்கு முற்பட்டவர் என்னலாம். குறிப்புகள் 1. திருத்தொண்டர் புராண வரலாறு, செ. 98. 2. திருத்தொண்டர் புராண வரலாறு, செ. 24. 3. திருத்தொண்டர் புராண வரலாறு, செ. 99. 4. திரு. வி. கலியாணசுந்தர முதலியார் பதிப்பு, முகவுரை, பக்கம் 6. 5. செ. 39; தமிழ்ப் பொழில், துணர் 3, பக்கம் 209, 6. இடங்கழியார் புராணம், செ. 2, 3. 7. கழற்சிங்கர் புராணம், செ. 1, 2, ஐயடிகள் புராணம், செ. 1, 2, 7, 8 செ. 46. 9. பெரிய புராண ஆராய்ச்சி, அதிகாரம் 2. 10. செ. 26. 28. i I. A. R. E. 1918. H. 34. 2. S. I. I. II. P. 20. 3. நாவலர் பதிப்பு: C.K.S. முதலியார் பதிப்பு, Vol. 1. 14. செய்யுள் 59. 58, 52.
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/164
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை