பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கம்பர் காலம் கம்பர் காலம் யாது என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேற்றுமைகள் உள்ளன. சிலர், "எண்ணிய சகாப்தம் எண்ணுற்றேழின் மேல்" என்னும் பாடலை ஆதாரமாகக் கொண்டு, கி.பி. 885 இல் இவ்வுத்தம காவியம் அரங்கேற்றப்பட்டது என்பர். வேறு அறிஞர்கள் சிலர் இக்காவியம் அரங்கேறிய காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதி என்பர். இவ்விரு கொள்கைகளில் வன்மையுடையது எது என நாம் துணிதல் வேண்டும். "சகாப்தம் எண்ணுற்றேழின் மேல். அரங்கேற்றினானே' என்ற செய்யுளைக் கூர்ந்து நோக்குதல் வேண்டும். இதனை ஒப்புக்கொள்வதாயின், ஆழ்வார்கள் பலருடைய காலத்திற்கும் கம்பன் காலம் முற்பட்டதென்று ஏற்படும். கம்பன் சடகோபர் அந்தாதி பாடிய வரலாறு உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். சடகோபரது (நம்மாழ்வார்) காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டாகுமெனத் தக்க ஆதாரங்களால் நிறுவப்பட்டுள்ளது. ஆழ்வார்களில் கடைசியாகத் தோன்றியவர் இவரே. நாலாயிரத்தையும் முதல் ஆச்சாரியராகிய நாதமுனிகளுக்கு இவர் உபதேசித்தவர் என்று ஐதிகம் கூறுகிறது. 9 ஆம் நூற்றாண்டினராகிய திருமங்கையாழ்வாரது அருளிச் செயலினின்றும் ஒரு பாசுரத்தைக் கம்பன் அப்படியே அமைத்திருக்கிறான். ஏழை யேதலன் கீழ்மக னென்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து மாழை மான்மட நோக்கியுன் தோழி உம்பி யெம்பியென் றொழிந்திலை, உகந்து தோழ னியெனக் கிங்கொழி யென்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட ஆழி வண்ணநின் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத் தம்மானே. என்ற பாடலின் கருத்தும் சொல்லும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/167&oldid=793252" இலிருந்து மீள்விக்கப்பட்டது