160 கால ஆராய்ச்சி தமிழ் நூல்களில் காணப்படுதல் பெரிதும் அசம்பாவிதமாம். வேறொரு முக்கியமான செய்தியும் இங்கே சிந்தித்தற்குரியது. அரங்கேற்றுதல் என்பது அறிஞர்கள் கூடிய அவையில் நூல்கள் படிக்கக் கேட்டு அங்கீகரிக்கப்படுவதைக் குறிப்பதற்கு, முன்னாளில் வழங்கப்படவில்லை. தொல்காப்பியத்தில், நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி என்றே வந்துள்ளது. சிலப்பதிகார, மணிமேகலைப் பாயிரங்களில் θσιί-, உரைசா லடிகள் அருள மதுரைக் கூல வாணிகள் சாத்தன் கேட்டனன் - (சிலப்., பதி., 88-89) இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் - - - - - - - - - - - - - - - - - - - - அறிய வைத்தனன் (மணிமேகலை, பதி, 95-98) என்றேதான் வந்துள்ளன. சிந்தாமணியில் 'தேனுற நின்று தெருண்டாரவை செப்பலுற்றேன் என வருகிறது. சூளாமணியில், தேமாண் அலங்கல் திருமால் நெடுஞ்சேந்தன் என்னுங் கோமான் அவையுள் தெருண்டார் கொளப்பட்டதன்றோ என்று உள்ளன. ப்ெரிய புராணம் முதலியவற்றிலும் இங்ங்னமே. - அரங்கேற்றம் என்ற தொடர் வழக்கு நாட்டியக் கலை ஒன்றினுக்கே முதலில் உரித்தாக வழங்கி வந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதை என வருமிடத்தை நோக்குக. ஐய நுண்ணிடையார் ஆடும் நாடக அரங்கு கண்டார் என்றனன் கம்பனும். கற்றறிந்தார் அவையில் நூலைக் கேட்பித்தற்கு இத்தொடரை மிகப் பிற்பட்ட காலத்தேதான் வழங்கலாயினர். இப்பிற்பட்ட வழக்கு இப்பாடலில் வந்துள்ளதால் இதன் காலமும் மிகப் பிற்பட்டதே எனத் துணியலாம். எவ்வளவு பிற்பட்டதென நாம் துணிய அவசியமில்லை. இக்காரணங்களால் இச்செய்யுள்
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/169
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/22/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.pdf/page169-1024px-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.pdf.jpg)