தொல்காப்பியர் காலம் 17 13. ஒத்தென மொழிப உயர்மொழிப் புலவர் ” 472 14. தொன்று மொழிப் புலவரது பிண்டம் என்ப ” 474 15. ஆங்கென மொழிப அறிந்திசி னோரே ” 514 16. தோலென மொழிப தொன்னெறிப் புலவர் * 539 17. புலனென மொழிப புலனுணர்ந்தோரே நூற்பா 542 18. நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் x * 571 தினரே 19. நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர் ** 644 20. சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் 646 דיג சுவை பயக்கும் இத்தொடர்களை, அவையுள்ள இயல்களையும், நூற்பாக்களையும் கொண்டு ஆராய்ந்து முடிபு கூறல் அழகியதாகும். இத்தொடர்கள் பல துறைப் புலவர்களைச் சுட்டுதல் தெற்றென. விளங்குதல் காண்க. இவற்றை நோக்கும் அறிஞர் சிறப்பாகப் பொருளதிகாரத்தில் வரும் 4, 5, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 20 ஆம் எண்கள் சுட்டும் தொடர்களைக் காண்கையில், மேற் கூறப்பெற்ற உண்மையை எளிதில் உணர்வர். தொல்காப்பியத்தின் பழைமை தொல்காப்பியம் -எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, திருக்குறள் என்பவற்றிற்குக் காலத்தால் முற்பட்டது என்பது பலர் கொள்கை, பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள், தொல்காப்பியம், மேற் சொல்லப் பெற்ற நூல்களுக்குக் காலத்தால் பிந்தியது என்று கூறியுள்ளார். இவர் கூறியுள்ளகாரணம் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சியாளர் வித்துவான் க.வெள்ளை வாரணனார் தமது "தொல்காப்பியம்” என்னும் ஆராய்ச்சி நூலில் மறுத்துள்ளார்.' இலக்கண நூல் செய்யும் ஆசிரியன் தன் காலத்தில் உள்ள எல்லா இலக்கிய நூல்களையும், இலக்கண நூல்களையும் நன்கு ஆராய்ந்த பின்பே, இலக்கண விதிகளை அமைப்பது இயல்பு; உலக வழக்கில் உள்ள சொற்கள், செய்யுள் வழக்கிலுள்ள சொற்கள் ஆகிய இவற்றை ஆராய்ந்து விதி கூறுதல் இயல்பாகும். தொல்காப்பியர் புறநானூறு முதலிய நூல்களுக்குப் பிற்பட்டவராயின், அவற்றின்கண் காணப்படும் வழக்காறுகளை உள்ளத்துள் வைத்தே நூல் செய்திருப்பார். அவர் மேற்கூறப் பெற்ற நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டவர் ஆயின், பின் நூல்களிலுள்ள மாறுதல்களுக்கு அவர்
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை