பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம் 25 சிறுகாக்கைபாடினியார் வாழ்ந்தனர் என்பதும் இதுகாறும் கூறியவற்றால் நன்கறியலாம். தொல்காப்பியர் காலம் வட மொழியில் வல்ல வட நாட்டார் தமிழகத்தில் நுழைந்து, இங்கேயே தங்கி வாழலாயினர். அதனால், அவர்தம் சொற்கள் தமிழ் மொழியில் இடம் பெறலாயின. இக் காரணத்தால்தான், வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே, எனவும் சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” எனவும் தொல்காப்பியர், வடசொற்கள் தமிழிற் கலத்திற்கு இலக்கணம் கூறினார்; மேலும், சூத்திரம், படலம், பிண்டம். அம்போதரங்கம், காண்டிகை முதலியவற்றுக்கு இலக்கணம் கூறியுள்ளார். அவருக்கும் முற்பட்ட காலத்தில் பிற மொழிச் சொற்கள் தமிழில் எடுத்தாளப்படுவதற்கு இலக்கண ஆசிரியர் விதி கூறி இருப்பரேல், தொல்காப்பியர் அவ் விதியைச் சுட்டிக்காட்டி, என்ப' என்றோ 'என்மனார் புலவர் என்றோ கூறியிருப்பார். அங்ங்ணம் அவர் கூறாமையால், அவரே இப் புது விதிகளை வகுத்தவர் என்று சொல்லலாம் (இது முன்பே கூறப்பெற்றது). அவர் காலத்தில் தள்ள முடியாத அளவிற்கு வட சொற்கள் தமிழில் இடம் பெற்று விட்டதனால், அவர் அவற்றிற்கு விதி கூறும் நிலைமை ஏற்பட்டது என்று கூறலாம். ஆரியர் (வட மொழியாளர்) தமிழகத்திற்கு வந்த காலம் கி.மு. 7 நூற்றாண்டாக இருக்கலாம் எனப் பேராசிரியர் வி. அரங்காச்சாரியார் குறித்துள்ளார்." தமிழகத்தில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இசுலாம் பரவத் தொடங்கியது. கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபர அடிகள் தம் செய்யுட்களில், சலாம்', 'சொக்காய்' என்னும் இந்துஸ்தானிச் சொற்களைப் பயன்படுத்தினார். இதனை நோக்க, வட மொழியாளர் தமிழகத்தில் தங்கித் தமிழரோடு ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் பழகிய பின்பு தான் அவர்தம் சொற்கள் தமிழில் இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்று கருதுதல் தவறாகாது. இதனை நோக்கத் தொல்காப்பியர் ஏறத்தாழக் கிமு 4 - ஆம் நூற்றாண்டினர் எனக் கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/33&oldid=793306" இலிருந்து மீள்விக்கப்பட்டது