தொல்காப்பியர் காலம் 27 தமிழகத்தில் வாழ்ந்தவராகலாம். எனவே, தொல்காப்பியர் பாணினிக்கு முன்பு அல்லது அவரது காலத்தில் (அவரது நூல் தமிழகத்தில் பரவாத காலத்தில்) வாழ்ந்தவர் என்று கூறலாம். பாணினியின் காலம் கி.மு. 4 - நூற்றாண்டு என்று மேனாட்டு அறிஞர் கூறியுள்ளார். 53 தொல்காப்பியம் செய்யப்பட்ட பின்பே பாண்டியர் தலைநகரான கபாடபுரம் கடலாற் கொள்ளப்பட்டது என்று இறையனார் களவியலுரை கூறுகின்றது. பாண்டியரது கபாடபுரம் பற்றிய குறிப்பு வால்மீகி இராமாயணத்திலும், வியாச பாரதத்திலும் வருகின்றது. வியாச பாரதம் பல இடைச் செருகல் பெற்று, இன்றுள்ள நிலையை அடைந்த காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்படாது என்று வின்டர் நிட்ஸ் கூறியுள்ளார். எனவே, பாரதத்திற் குறிக்கப் பெற்ற கபாடபுரம் கி.மு. 4, 3 - ஆம் நூற்றாண்டுகளில் நல்ல நிலையில் இருந்திருத்தல் கூடியதே எனக் கொள்ளலாம். இதற்கு அரண் செய்வது போலக் கி.மு. 4 ஆம் நூற்றாண்டினனான சந்திரகுப்தன் (Q.பி. 325 - 301) அமைச்சனான சாணக்கியன் தனது பொருள் நூலில் முத்துக்களின் பெயர்களைக் கூறும் இடத்தில். 'பாண்டிய கவாடம் என்று ஒரு முத்தின் வகையைக் குறிப்பிட்டுள்ளான். அது பாண்டியரது கபாடபுரத்துக் கடல் முத்தே என்பது தெளிவு. கபாடபுரம் அழிந்த பிறகு அந்நகரின் பெயரைக் கூட்டி அக்கடற் பகுதியில் கிடைக்கும் முத்திற்குப் பெயர் வழங்கினர் என்று கூறுதல் ஏற்புடையது ஆகாது. கபாடபுர அழிவிற்குப் பின்பு கொற்கை முத்தே தொகை நூல்களிற் பேசப்படுகின்றது காண்க 'எனவே, கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் கபாடபுரம் இருந்தது என்று கொள்வதே பொருத்தமாகும். 'இலங்கையில் தோன்றிய மூன்று கடல்கோள்களுள் முதற் கடல்கோள் கி. மு. 2387 இல் இலங்கையை இந்தியாவினின்றும் பிரித்தது; இரண்டாம் கடல்கோள் கி.மு.504 இல் நிகழ்ந்தது; ஆயின், குறிப்பிடத்தக்க பேரிழப்பு இல்லை. மூன்றாம் கடல்கோள், அசோகன் காலத்தில் வாழ்ந்த தேவனாம்பிரிய திஸ்ஸன் காலத்தில் கி.மு 306 இல் உண்டானது. அதனால் ஒரு லட்சம் ஊர்களும் மீன் பிடிப்பவர் வாழ்ந்த சிற்றுார்கள் 910 -ம் (தொள்ளாயிரத்துப் பத்தும்) முத்தெடுப்பவர் வாழ்ந்த நானூறு சிற்றுார்களும் அழிந்தன, " என்று இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. முதற் கடல்கோள் இலங்கையைத் தமிழகத்திலிருந்து வேறு பிரித்தது என்பதால், அடுத்து நிகழ்ந்த கடல்கோள்களும்
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை