பத்துப்பாட்டின் காலம் 53 பொருத்தமாகும். எனவே, சிறுபாணாற்றுப்படை ஏறத்தாழக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம். இதுகாறும் கூறப்பெற்ற செய்திகளைக் கொண்டு, (i) குறிஞ்சிப் பாட்டு, பொருநர் ஆற்றுப்படை, பட்டினப் Lissolo), பெரும்பாணாற்றுப்படை ஆகிய நான்கு பாடல்களும் ஏறத்தாழக் கரிகாலன் காலத்தவை (கி.பி. 75-115) ஆகலாம் என்றும், (2) மலைபடுகடாம், நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு ஆகிய நான்கும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகலாம் என்றும், அனைத்திற்கும் இறுதியில் பாடப் பெற்ற சிறுபாணாற்றுப்படை கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் செய்யப்பட்டதாகலாம் என்றும் கொள்வது பொருத்தமாகும். வேறுதக்க சான்றுகள் கிடைக்கும் வரையில் இம்முடிபைக் கொள்ளுதல்தகும். t பத்துப் பாட்டுள் எஞ்சியிருப்பது திருமுருகாற்றுப் படை ஒன்றேயாம். இனி இதன் காலத்தை ஆராய்வோம். திருமுருகாற்றுப்படையின் காலம் தொல்காப்பியர், கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகிய நால்வரையும் பொருளுதவி புரியும் வள்ளல்பால் ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை எனக்கூறினார். பாணனை ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை எனவும், பொருநரை ஆற்றுப்படுத்துவது பொருநர் ஆற்றுப்படை எனவும், கூத்தரை ஆற்றுப்படுத்துவது கூத்தர் ஆற்றுப்படை எனவும், விறலியை ஆற்றுப்படுத்துவது விறலி ஆற்றுப்படை எனவும் பெயர் பெறும். இதனால், புலவரை ஆற்றுப்படுத்துதல் தொல்காப்பியர்க்கு முன்பும் அவர் காலத்திலும் வழக்கில் இல்லை என்பது தெளிவாகிறது. இந்நிலையில் மனிதனைத் தெய்வத்தினிடம் ஆற்றுப்படுத்தும் வழக்கம் அக்காலத்தில் அறவே இல்லை என்பது தெளிவாகும். புலவராற்றுப் படையின் இலக்கணம் பின் வந்த நூல்களிற் கூறப்பட்டுள்ளது. (1) புறப்பொருள் வெண்பாமாலை ஏறத்தாழக் கி. பி. 11 ஆம் நூற்றாண்டு நூலாகும்." * அந்நூலுள் புலவராற்றுப்படை என்ற பிரபந்தத்தின் இலக்கணம் முதன்முதலில் கூறப்பட்டுள்ளது. புலவராற் றுப்படை புத்தேட்கும் உரித்தே * . (204)
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/60
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை