56 கால ஆராய்ச்சி அங்கையேற்ப என்றது, இறைவனிடத்தினின்றும் இந்திரன் வாங்கிய கருப்பத்தினை. முனிவர் வாங்கித் தமக்குத் தரிக்கலாகாமையின், இறைவன் கூறாகிய முத்தீக்குண்டத்து இட்டதனைக் கூறிற்று", என்று விளக்கம் தந்துள்ளார். நச்சினார்க்கினியர் பரிபாடல் 5 ஆம் பாடலின் கருத்தை இங்குள்ள முதலடிக்கு ஏற்றிக் கூறியுள்ளார். இதே கருத்தினை 50 ஆம் அடியின் உரை அடியிலும் எழுதி, "இதனை, பா யிரும் பனிக்கடல் என்னும் பரிபாட்டான் உணர்க, இவ்வாறன்றி, வேறு வேறு புராணம் கூறுவாறும் உளர்", என்றும் எழுதியுள்ளமை நோக்கற் பாலது. இதனை நோக்க, நச்சினார்க்கினியர் காலத்திலேயே முருகன் பிறப்புப் பற்றிப் பரிபாடற் செய்தியினும் வேறுபட்ட வரலாறு கூறப்பட்டமை தெளிவாம். அவ்வேறுபட்ட செய்தி யாது? கந்தபுராணத்தில் முருகன் பிறப்பு கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்த புராணம் திருவவதாரப் படலத்தில் முருகன் பிறப்புப் பற்றிக் கூறும் செய்தி பின்வருமாறு: பிரமன் திருமால் இந்திரன் முதலியோர் சிவனைக் கண்டு, சூரன் முதலிய அசுரரை அழிக்கத்தக்க மைந்தனை உதவும்படி வேண்டினர் (செ. 42). அப் பெருமான் உடனே தன்கண் ஆறு முகங்களைத் தோற்றுவித்தான் (செ 43). அவற்றிலுள்ள ஆறு நெற்றிக்கண்களிலிருந்தும் ஆறு தீப் பொறிகள் வெளிப்பட்டன (செ. 45). "இப்பொறிகள் ஒரு மைந்தன் உருவத்தைப் பெறும். அம்மைந்தன் அசுரரை வெல்வான். நீங்கள் இப்பொறிகளைக் கங்கையில் விடுங்கள். கங்கை சரவணப் பொய்கையில் இவற்றை உய்க்கும்" என்றனன் (55); காற்றுத் தேவனையும் தீத் தேவனையும் நோக்கி, "நீவிர் இருவிரும் இப்பொறிகளைக் கங்கையில் விடுமின், என்று பணித்தான் (66-67). காற்றுத் தேவன் சிவனை வணங்கி, அத்தீப்பொறிகளைத் தன் தலைமீது தாங்கிக் கொண்டு தீக் கடவுளுடன் சென்றான் (77); வழியில் அவற்றைத் தீக் கடவுள் தலைமீது வைத்தான் 4ே). தீக் கடவுள் அவற்றைக் கொண்டு சென்று கங்கையில் இட்டான் (85). கங்கை அவற்றைச் சரவணப் பொய்கையில் உய்த்தது (87). இறைவன் அருளால் அப்பொறிகள் ஆறுமுகங்களையும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரு குழந்தையாய் விளங்க, அக்குழந்தை தாமரை மலர்மீது வீற்றிருந்தது (92-96). அதனைக் கண்ட அரி முதலிய அமரர் குழந்தையைப் பாலூட்டி
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/63
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை