60 கால ஆராய்ச்சி என்பது நச்சினார்க்கினியர் உரை. இங்ங்னம் பொருள் கொள்ளினும் முருகன் மும்மூர்த்திகளிலும் மேலானவன் என்னும் பொருளே பெறப்படுதல் காணலாம். t புறநானூற்றுப் பாடலில் அந்நால்வர்க்கும் அத்தொழில்கள் இயற்கையாய் அமைந்தன என்று கூறிய நக்கீரர் (அவரே திருமுருகாற்றுப்படை ஆசிரியராயின்) தம் கூற்றுக்கு மாறுபடத் தமது திருமுருகாற்றுப்படையில் கூறியிருப்பாரா? சங்க காலப் புலவர், நன்மாறனைப் பாடிய நக்கீரர் போலவே கடவுளர் பலரையும் சிறப்பித்தே பாடுவர். சான்றாகக் கடுவன் இளவெயினனார் பரிபாடலில் திருமாலை யும் முருகனையும் தனித்தனிப்பாடலில் பாராட்டியுள்ளார். சங்க காலப் புலவர் பெருமக்கள் பிற்காலத்தார் போல ஒரு தெய்வத்தை உயர்த்துவதற்குப் பிற தெய்வங்களைத் தாழ்த்திப் பாடினமைக்குச் சான்றில்லை. திருமாலையும் பலதேவனையும் இரு பெருந் தெய்வம்' என்று புறநானூற்றுப் பாடலொன்று (செ. 58) காரிக் கண்ணனாரால் பாடப்பட்டது. திருமாலையும் சிவனையும் இரு பெருந் தெய்வம் என்று அகநானூற்றுப் பாடல் ஒன்று (செ. 350) மதுரைக் கண்ணத்தனாராற் பாடப்பட்டது. சிலப்பதிகாரம் பாடிய இளங்கோ அடிகள் சிவனையும் முருகனையும் திருமாலையும் வாயாரப் பாராட்டிப் பாடியுள்ளமையே ஏற்ற சான்றாகும். 'பரிபாடலில் (8) முருகனைக் காண மும்மூர்த்திகளும் மற்ற தேவரும் திருப்பரங்குன்றம் வந்தனர் என்பது கூறப்பட்டுள்ளதே? எனின் அங்கு அம்மூவரும் அவரைக் குறையிரக்க வந்தனர் என்று அப்பாடல் ஆசிரியர் கூறவில்லை; நின்னைக் காண்பது காரணமாக வந்தனர். என்றே கூறியுள்ளார். வள்ளித்திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றதை 19 ஆம் பாடலைக் கொண்டு அறியலாம். மேலும், சிவபிரான் பிள்ளையாகிய முருகனை முழு முதற் கடவுளாக்கிச் சிவபெருமானே அவனிடம் சென்று வரம் வாங்கியதாகப் பிற்காலத்தார் பாடியதுபோலச் சங்க காலப் புலவர் யாண்டும் சிவபிரானை முருகனுக்குத் தாழ்ந்தவனாகக் கூறாமையும் அறிற்பாலது. மும்மூர்த்திகளுக்குத் தலைமை தரும் நிலையில் முருகன் பிறந்தான் என்பது, முருகன் மும்மூர்த்திகட்கும் உயர்ந்தவன் என்று பொருள்படுவதாகும். இங்ங்னம் சங்க காலப் புலவர் யாண்டும் பாடவில்லை. முருகனை முழுமுதற் கடவுளாகக் கருதும் நிலை
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/67
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை