கலித்தொகையின் காலம் 79 மறைத்தமை (150). இவற்றுள் சிவன் முப்புரம் எரித்தமையும், முருகன் சூரபதுமனை அழித்தமையும் பிற நூல்களில் இடம் பெற்றுள்ளன. ஏனையவை முதன் முதலாக இந்நூலில்தான் கூறப் பட்டு உள்ளன என்பது கவனிக்கத்தாகும். இவை அனைத்தும் இந்நூலிற்கே உரிய புதுமைகளாகும். கலித்தொகை ஆசிரியர் கலித்தொகை என்பது கடவுள் வாழ்த்து உட்பட 150 கலிப்பாக்களைக் கொண்டதாகும். இவை பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் ஒழுக்க வகையில் அமைந்துள்ளன: பாலைத்திணை பற்றி 35 செய்யுட்களும், குறிஞ்சித் திணை பற்றி 29 செய்யுட்களும், மருதத்திணை பற்றி 35 பாக்களும், முல்லைத்திணை பற்றி 17 பாடல்களும், நெய்தல்திணை பற்றி 37 பாடல்களும் இதன்கண் அமைந்துள்ளன. ஏறத்தாழக் கி.பி. 14ஆம் நூற்றாண்டினர் எனக் கருதத்தகும் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியர் இந்நூலுக்கு அழகிய உரை எழுதியுள்ளார். அவர் கடவுள் வாழ்த்துப் பகுதியில், "ஆதலால் ஈண்டுப் பாலைத்திணையையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தார் என்று கூறுக" என்றும், நூலின் இறுதியில், “முல்லை, குறிஞ்சி, மருதம் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என்புழிச் சொல்லாத முறையால் சொல்லவும் படும் என்றலின் இத்தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என இம்முறையே கோத்தார் நல்லந்துவனார்', என்றும் கூறியுள்ளார். அவரே நெய்தற்கலி 25 ஆம் செய்யுள் உரையில், "சொல்லெச்சமும் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார், என்பதையும் குறித்துள்ளார். இக்கூற்றுக்களை நோக்க, நல்லந்துவனார் நெய்தற்கலியை மட்டும் பாடினவர் என்பதும், அத்துடன் தம் காலத்தில் இருந்த பிற கலிப்பாக்களையே கோத்து முறைப்படுத்தியவர் என்பதும் நச்சினார்க்கினியர் கருத்தாதல் தெளிவாகும். ஆயின், நச்சினார்க்கினியர் தமது உரையில் பிற கலிகளை இயற்றிய ஆசிரியர் பெயர்களைச் சுட்டவில்லை. இதனால் அவர் காலத்திலேயே பிற கலிகளைப் பாடிய ஆசிரியர்களைப் பற்றி ஒன்றும் தெரிய வில்லை என்பது தெளிவாகும். கலித்தொகையை முதலில் வெளியிட்ட திரு.சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இந்நூல் இயற்றியோர் ஒருவரே எனக் கருதினர். அதன்பின்,
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/86
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை