பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கால ஆராய்ச்சி பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி மருதனிள நாகன் மருதம்-அருஞ்சோழன் நல்லுருத்தி ரன்முல்லை நல்லந் துவனெய்தல் கல்விவலார் கண்ட கலி. என்னும் வெண்பா வெளிப்பட்டது. அது முதல், ஐந்து கலியும் புலவர் ஐவரால் பாடப்பட்டவை எனத் தமிழறிஞர் கருதலாயினர். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைப் புலவராக இருந்த திரு. K.N. சிவராசப் பிள்ளை அவர்கள் கலித்தொகை ஆசிரியர் ஒருவரே என முடிவு கட்டினர். ஐவர் அல்லர்: காரணங்கள் (1) கலித்தொகை ஆசிரியர் ஐவரே என்பதற்கு மேற்காட்டிய வெண்பாவைத் தவிர வேறு சான்று இல்லை. எனவே, அவ்வெண்பா நம்பத்தக்கதா என்பதை முதற்கண் ஆராய்தல் வேண்டும். 1. பாலைக் கலியைப் பாடியவர் - பெருங்கடுங்கோன் 2. குறிஞ்சிக் கலியைப் பாடியவர் - கபிலர் 3. மருதக் கலியைப் பாடியவர் - மருதன் இளநாகனார் 4. முல்லைக் கலியைப் பாடியவர் - சோழன் நல்லுருத்திரன் 5. நெய்தற் கலியைப் பாடியவர் - நல்லந்துவனார் என்பது அவ்வெண்பாவில் உள்ள செய்தி. ஏனைய தொகை நூல்களில் பாலைத்திணை பற்றிப் பல செய்யுட்களைக் கடுங்கோன் பாடியிருத்தலாலும், குறிஞ்சித்திணை பற்றிப் பல செய்யுட்களைக் கபிலர் பாடியிருத்தலாலும், முதலிரண்டு கலிகளை இவர்கள் பாடினார்கள் எனக் கொள்ளினும், ஏனைய மூன்றையும் பிற புலவர் மூவரும் பாடத் தகுதி வாய்ந்தவர் என்பதற்குரிய சான்று ஏனைத் தொகை நூல்களிற் காணக்கூடவில்லை. மருதன் இளநாகனார் பிற நூல்களில் பாடியனவாகக் காணப்படும் 39 செய்யுட்களில் பாலை பற்றி 17 ஆம் குறிஞ்சி பற்றி 9 ஆம், முல்லைபற்றி 5 ஆம் நெய்தல்பற்றி 5 ஆம் மருதம்பற்றி மூன்றுமே உள்ளன. இவர் மருதக் கலியைப் பாடினார் என்பது பொருந்துவதாக உள்ளதா? சோழன் நல்லுருத்திரன் புறநானூற்றில் ஒரு செய்யுளே (190) பாடியதாகத் தெரிகிறது. அவன் பாடிய பா ஒன்றும் வேறு தொகை நூல்களில் இல்லை. அவன் முல்லைக் கலியைப் பாடினான் என அவ்வெண்பா கூறுகிறது. நல்லந்துவனார் நெய்தற்றிணையில் ஒரு செய்யுளும் செய்திலர். அவர் நெய்தற் கலியைப் பாடியதாக வெண்பா விளம்புகிறது.' 2. முல்லைக் கலியில் கூறப்படும் முல்லை நில மக்கள் பாண்டிய நாட்டவராகக் காணப்படுகின்றனர். அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/87&oldid=793431" இலிருந்து மீள்விக்கப்பட்டது